”வில்வித்தையில் இந்தியாவுக்கு மகுடம்” : தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் : சாதித்து காட்டிய குங்கும் மொஹோத்..!

ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் மகளிருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் குங்கும் மொஹோத் தங்கம் வென்றார்.
India's Kungum Mohod won gold in  women's individual recurve archery event at Asian Games
India's Kungum Mohod won gold in women's individual recurve archery event at Asian Gamessource:thamizhalai,ai generated
1 min read

வரலாறு படைத்த குங்கும் மொஹோத்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பதக்கங்களை வென்று அசத்தி வருகிறது. 17 வயதான குங்கும் மொஹோத், தென் கொரியாவின் ஓ எஜினை ஷூட்-ஆஃப் முறையில் வீழ்த்தி வரலாறு படைத்தார்.

தனிநபர் பிரிவில் அசத்தல்

இறுதி சுற்றில் ஐந்து செட்கள் சமனில் முடிந்த நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடத்தப்பட்டது. இதில் தென் கொரிய வீராங்கனை ஓ எஜின் 8ல் அம்பை செலுத்திய நிலையில், 10ல் அம்பை எய்தி தங்கத்தை வென்றார் குங்கும்.

இது நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் மகளிருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் கிடைத்துள்ள முதல் தங்கமாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே இந்த தொடரில் மகளிர் ரீகர்வ் அணியில் தங்கம் வென்றிருந்தார் குங்கும். மேலும், கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளி வென்றிருந்தார்.

கோல்ஃப் விளையாட்டில் தங்கம்

நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் கோல்ஃப் விளையாட்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் பிரணவி. இதன் மூலம் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் கோல்ஃப் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதே கோல்ஃப் விளையாட்டில் இந்திய மகளிர் அணியினர் வெள்ளி வென்றனர்.

======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in