IPL 2026 : 15 பந்துகளில் அரைசதம், நடப்பு ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி சாதனை !

vaibhav suryavanshi record: 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
IPL  2026 Vaibhav Suryavanshi Sets a Record in the Current IPL Season!
IPL 2026 Vaibhav Suryavanshi Sets a Record in the Current IPL Season! source : google
1 min read

IPL 2026 Vaibhav Suryavanshi Sets a Record in the Current IPL Season!

2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ்

மார்ச் 30 ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது.

மூன்றாவது அதிவேக அரைசதம்,சூர்யவன்ஷி சாதனை

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய பதினைந்தே வயதான வைபவ் சூர்யவன்ஷி வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிவேக அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, ராஜஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 127 ரன்னில் சுருண்டது.

தொடக்க வீரராக சூர்யவன்ஷி அதிரடி

128 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி தொடக்கம் முதலே அதிரடி காட்டி ஆடினார்.

15-வது பந்தில் அரைசதம்

மேட் ஹென்றி வீசிய ஓவரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளுடன் ஆட்டத்தை தொடங்கிய வைபவ் சூர்யவன்ஷி, 15-வது பந்தில் தனது அரைசதத்தை எட்டினார்.

மொத்தமாக 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் சூர்யவன்ஷியின் ஸ்ட்ரைக் ரேட் 305.88.

முன்னணி வீரர்களின் சாதனையை சமன் செய்த சூர்யவன்ஷி

15 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் யூசுப் பதான், சுனில் நரைன் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் சாதனையை 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி சமன் செய்துள்ளதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தற்போது முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்.

யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி , கடந்த 2025 ஏலத்திலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் அடையாளம் காணப்பட்டார்.

17 பந்துகளில் அரைசதம்

ஏற்கனவே கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் மற்றும் 35 பந்துகளில் சதம் அடித்து மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தொடங்கியுள்ள 2026 ஐபிஎல் சீசனின் முதல் போட்டியிலேயே தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in