RCB, RR அணிகளை வாங்க அதிக போட்டி : கவனம் பெறும் IPL வணிக மதிப்பு

ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கு பெரும் அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்ரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை வாங்க உலக முதலீட்டாளர்கள் கடும் போட்டியில் இறங்கியுள்ளதாக செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது .
ipl 2026 | Global investors are competing to buy RCB and Rajasthan team |sports news
ipl 2026 | Global investors are competing to buy RCB and Rajasthan team |sports news Source : IPL 2026
1 min read

இறுதி பட்டியல்

ஆர்சிபி

Global investors To Buy IPL 2026 RCB, Rajasthan Royals Team : ஆர்சிபி அணியை வாங்க 8 முதலீட்டாளர்கள் இருப்பதாக இறுதி பட்டியல் தெரிவித்துள்ளது .அதனபடி அணியின் மதிப்பு 1.2 முதல் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்க்காக 5 முதலீட்டாளர்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு 1.2 முதல் 1.4 பில்லியன் டாலர் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் பட்டியலில்

ஆர்சிபி அணியை வாங்குவதற்கான முதலீட்டாளர்கள் பட்டியலில், மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் இணை உரிமையாள்ர் அவ்ரம் கிளேசர், மணிப்பால் குழுமம், சீரம் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் அதார் பூனாவாலா, டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், பிரபல தனியார் முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான போட்டியிலும் இதேபோல் சர்வதேச முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ,மனோஜ் பாதாலே தலைமையிலான ‘எமெர்ஜிங் மீடியா’ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .

இறுதி ஒப்பந்தப் புள்ளி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான இறுதி ஒப்பந்தப் புள்ளிகள் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆர்சிபி அணி தொடர்பான ஒப்பந்தப் புள்ளி தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை; ஆனால் பிப்ரவரியில் நடைபெறும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கவனம் பெரும் ஐபிஎல் வணிக மதிப்பு

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் வணிக மதிப்பு உலக அளவில் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதைக் காட்டும் முக்கிய செய்தியாக இது பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in