ஐபிஎல் 2026 : நடப்பு தொடர் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!

தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை தன வசம்படுத்தியது
IPL 2026: Mumbai Indians beat Kolkata in the ongoing series
IPL 2026: Mumbai Indians beat Kolkata in the ongoing series google
1 min read

மும்பை அணி வெற்றி

நடப்பாண்டு ஐபில் தொடரில் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று மும்பை அணி நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதிரடியான தொடக்க வெற்றி

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில் , தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அஜிங்க்ய ரஹானே மற்றும் ஃபின் ஆலன் ஜோடி அதிரடியாக விளையாடி அஜிங்க்ய ரஹானே 40 பந்துகளில் 67 ரன்களும், ஃபின் ஆலன் 17 பந்துகளில் 37 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தனர்

அதிக ரன்களை விளாசிய மும்பை அணி

221 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரையான் ரிகெல்டன் ஜோடி தொடரை நன்றாக கையாள , முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பழைய ஃபார்முக்குத் திரும்பி, 38 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசினார்.

அவருக்கு இணையாக விளையாடிய ரையான் ரிகெல்டன் 43 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். இவர்களின் 148 மும்பையின் வெற்றிக்கு கைகொடுத்தது

4 விக்கெட் = 224 ரங்களில் வெற்றி

இறுதிக்கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 16 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா 18 ரன்களுடன் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தார்.

19.1 ஓவர்களிலேயே மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது மும்பை அணி

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in