ஐபிஎல் 2026 : ”விராட் கோலி உலக சாதனை!” : குஜராத்தை வீழ்த்தி 2ம் இடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி!

ஐபிஎல் 2026: உலகின் முதல் வீரராக வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி!
Virat Kohli Sets Historic Record as the First Player in the World
Virat Kohli Sets Historic Record as the First Player in the World source:IndianPremierLeague,x.com
1 min read

IPL 2026: Virat Kohli Sets Historic Record as the First Player in the World - Bangalore Secures a Magnificent Victory by Defeating Gujarat!

Banglore vs Gujrat

18-வது ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

ரசிகர்களுக்கு கிரிக்கெட் விருந்து

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சாதனைகள் பல முறியடிக்கப்பட்டு, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான கிரிக்கெட் விருந்தாக அமைந்தது.

சாய் சுதர்சனின் அதிரடி சதம்!

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில், இளம் வீரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி சதமடித்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 205 ரன்கள் குவித்தது.

கெய்ல் சாதனை முறியடிப்பு

இந்தப் போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை சாய் சுதர்சன் முறியடித்தார்.

விராட் கோலியின் உலக சாதனை!

206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். இந்தப் போட்டியில் அவர் நிகழ்த்திய சாதனைகள் இதோ:

ஒரே நாட்டில் 10,000 ரன்கள் குவித்த முதல் வீரர்

உலகின் முதல் கிரிக்கெட் வீரராக, ஒரே நாட்டில் (இந்தியா) டி20 போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இரண்டாம் இடத்தில் ரோஹித் சர்மா

இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா 8,563 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஒரே அணிக்காக மெகா சாதனை

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக அதாவது RCB அணிக்காக விளையாடி 300 சிக்ஸர்கள் மற்றும் 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார்.

நழுவிய 9,000 ரன் சாதனை!

நேற்றைய போட்டியில் 92 ரன்கள் எடுத்திருந்தால், ஐபிஎல் வரலாற்றில் 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்திருப்பார். ஆனால், 81 ரன்களில் ஆட்டமிழந்ததால் வெறும் 11 ரன்களில் அந்தப் பொன்னான வாய்ப்பு நழுவியது.

பெங்களூர் அணி அபார வெற்றி!

ஆட்டத்தின் முதல் பந்திலேயே விராட் கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பைக் குஜராத் தவறவிட்டது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in