டிச.16-ல் கோவாவில் ஐபிஎல் 2027 மினி ஏலம்: 66 இடங்களுக்கு 184 வீரர்கள் போட்டி - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2027-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவாவில் நடைபெறும் என்றும், 66 இடங்களுக்கு 184 வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
IPL 2027 Mini Auction Goa BCCI Official Announcement
IPL 2027 Mini Auction Goa BCCI Official Announcementsource:x.com
1 min read

IPL 2027 Mini Auction Goa BCCI Official Announcement

3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஐபிஎல் ஏலம்

2027-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று சீசன்களாக வெளிநாடுகளில் நடைபெற்று வந்த ஐபிஎல் ஏலம், இந்த ஆண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் மொத்தம் 10 ஐபிஎல் அணி நிர்வாகங்கள் பங்கேற்க உள்ளன.

அணிகளின் கையிருப்புத் தொகை மற்றும் வீரர்கள் தேவை

அனைத்து அணிகளும் ஏலத்திற்கு முன்பாக வீரர்களைத் தக்கவைப்பதற்கும் (Retention), விடுவிப்பதற்கும் (Release) வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து அணிகளும் தங்களது இறுதிப் பட்டியலை வெளியிட்டன. அதன்படி ஏலம் குறித்த முக்கியப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

மொத்த இடங்கள் மற்றும் தொகை

கோவாவில் நடைபெறும் மினி ஏலத்தில் 10 அணிகளுக்கும் மொத்தம் 66 வீரர்கள் தேவைப்படும் நிலையில், அணிகளிடம் மொத்தம் ரூ. 297.95 கோடி மீதத் தொகை கையிருப்பில் உள்ளது.

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தொகை

இதில் அதிகபட்சமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ. 47.45 கோடியையும், குறைந்தபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 8.75 கோடியையும் மீதத் தொகையாக வைத்துள்ளன.

போட்டியிடும் வீரர்கள்

இந்த ஏலத்தில் பங்கேற்க 55 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 184 வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஏலம் நடைபெறும் நேரம் மற்றும் விளக்கக் கூட்டம்

கோவாவில் வருகின்ற டிசம்பர் 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஐபிஎல் ஏலம் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக, டிசம்பர் 15-ஆம் தேதி ஏலம் தொடர்பான விளக்கக் கூட்டம் அனைத்து அணி நிர்வாகங்களுக்கும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

===============