Italy Cricket Team Qualified for T20 World Cup 2026 in First Time in History
Italy Cricket Team Qualified for T20 World Cup 2026 in First Time in Historyhttps://x.com/FedCricket

T20 WC : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : முதன்முறையாக இத்தாலி தகுதி

Italy Qualified for T20 World Cup 2026 : அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி.20 உலகக் கோப்பை தொடருக்கு இத்தாலி அணி முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது.
Published on

டி.20 போட்டிகளுக்கு மவுசு :

Italy Qualified for T20 World Cup 2026 : கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளை விட டி20 ஆட்டங்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாக உள்ளது. எனவேதான், கிரிக்கெட் விளையாடும் நாடுகள், டி20 தொடர்களை நடத்தி வருகின்றன. இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் ஜூரம் அனைத்து நாடுகளையும் தொற்றிக் கொண்டு விட்டது என்றே கூறலாம்.

2026ல் டி20 உலகக் கோப்பை தொடர் :

மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை பார்த்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் டி.20 உலகக் கோப்பை(T20 World Cup) போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் உலகக் கோப்பை டி.20, 2026 போட்டிகள் நடைபெறுகின்றன. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்தியா இந்த தொடரில் விளையாடுகிறது.

டி.20 உ்லகக் கோப்பை - 20 அணிகள் பங்கேற்பு :

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து என மோத்தம் 20 அணிகள்(2026 Men's T20 World Cup Teams) இந்த தொடரில் பங்கேற்கின்றன.

மேலும் படிக்க : 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் : அயர்லாந்து பவுலர் உலக சாதனை

இத்தாலி அணி தகுதி :

இத்தாலி நாடு, கால்பந்திற்கு பேர் போனது. இதுவரை 4 முறை பிபா உலகக் கோப்பையை(FIFA World Cup) வென்ற நாடு இத்தாலி, தற்போது கிரிக்கெட்டில் கால் பதிக்கிறது அந்த நாடு. அதன்படி உலகக் கோப்பை டி.20 தொடரில் விளையாட இத்தாலி அணி முதல் முறையாக தகுதி(Italy Qualified for T20 World Cup 2026) பெற்றுள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஐரோப்பிய அணிகளுக்கான தகுதி சுற்றில் இத்தாலி விளையாடியது.

இத்தாலி அணி அசத்தல் :

இதில் ஸ்காட்லாந்து மற்றும் குயெர்ன்சி அணிகளை இத்தாலி வீழ்த்தியது. நெதர்லாந்து அணி உடன் தோல்வியை தழுவியது. Jersey உடனான ஆட்டம் கைவிடப்பட்டது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது இத்தாலி. 2 வெற்றி 1 தோல்வி உடன் 5 புள்ளிகளை பெற்று ரன் ரேட் அடிப்படையில் டி20 உலகக் கோப்பைக்கு(Italy in T20 World Cup) முதல் முறையாக இத்தாலி தகுதி பெற்றுள்ளது. இத்தாலி அணியை ஆஸ்திரேலிய அணிக்காக முன்பு விளையாடிய ஜோ பர்ன்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

இத்தாலி என்றாலே கால்பந்து :

இத்தாலி(Italy) என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கால்பந்து தான். அந்தநாட்டில் கால்பந்து அணி, 4 முறை உலகக் கோப்பை பட்டம், 2 முறை யூரோ சாம்பியன் மற்றும் 2 முறை நேஷன்ஸ் லீக் தொடரில் பட்டம் வென்றுள்ளது. ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்று அசத்தியது இத்தாலி கால்பந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in