”2வது முறையாக ICC தலைவர்” : போட்டியின்றி தேர்வானார் ஜெய் ஷா : 2028ல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட், நம்பிக்கை அதிகரிப்பு.!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Jay Shah elected unopposed as the Chairman of ICC for a second consecutive term
Jay Shah elected unopposed as the Chairman of ICC for a second consecutive termsource:thamizhalai,ai generated
1 min read

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

உலகளவில் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் உயரிய நிர்வாக அமைப்பு ஐசிசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

1909ம் ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் பிரதிநிதிகளால் 'இம்பீரியல் கிரிக்கெட் மாநாடு' (Imperial Cricket Conference) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

1965-ல் 'சர்வதேச கிரிக்கெட் மாநாடு' (International Cricket Conference) என்றும், 1989-ல் தற்போதைய 'சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்' (International Cricket Council) என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஐசிசி - 111 உறுப்பு நாடுகள்

மூன்று நாடுகளோடு தொடங்கப்பட்ட ஐசிசி இன்று 111-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளைக் கொண்டு செயல்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் நகரில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற முக்கிய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது.

நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளை நியமிப்பது.

கிரிக்கெட் விளையாட்டின் விதிகள் மற்றும் நடத்தை விதிகளை அமல்படுத்துவது இன்று பணிகளாகும்.

ஐசிசி நிர்வாக குழு கூட்டம்

ஐசிசி நிர்வாக குழு கூட்டம் இந்தோனேசியாவின் பாலியில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இயக்குநர்களின் முன்மொழிவைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கான முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது.

2024ல் பொறுப்புக்கு வந்த ஜெய் ஷா

முன்னதாக 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றார் ஜெய் ஷா.

ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்குப் பிறகு ஐசிசி தலைவராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிசிசிஐ கௌரவச் செயலாளராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.

2வது முறையாக ஜெய் ஷா

தான் தொடர்ந்து இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜெய் ஷா, ஐசிசி நிர்வாகக் குழுவும் இயக்குநர்களும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஜெய் ஷா உறுதி

உலக அளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும், 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவது புதிய ரசிகர்களையும் வீரர்களையும் உருவாக்க ஒரு அரிய வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்

ஜெய் ஷாவின் மறுநியமனத்துக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரிச்சர்ட் தாம்சன், ஐசிசி துணைத் தலைவரும் ஜிம்பாப்வே கிரிக்கெட் தலைவருமான தவங்வா முகுஹ்லானி, நியூசிலாந்து கிரிக்கெட் இயக்குநர் ரோஜர் ட்வோஸ் மற்றும் ஐசிசி அசோசியேட் உறுப்பினர் தலைவர் குருமூர்த்தி பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

================