

10 கோல்கள் எம்பாப்பே சாதனை
Golden Boot Fifa world cup Mbappe 2026 உலகக் கோப்பையில் பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் முன்னணி அணிகள் என கருதப்பட்டாலும், நாக் அவுட் சுற்றில் ஒரே பிரிவில் மோதியதால் பிரான்ஸ் வெளியேறியது.
இருந்தாலும், கேப்டன் எம்பாப்பே 10 கோல்கள் அடித்து தங்க காலணி வென்று, உலகக்கோப்பை வரலாற்றில் சரித்திரம் படைத்தார்.
2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் சிறந்த அணிகளாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இரண்டு அணிகள் பார்க்கப்பட்டன.
இந்த 2 அணிகள் தான் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சந்திக்கும் என சொல்லப்பட்ட நிலையில், துரதிருஷ்டவசமாக இரண்டு அணிகளும் நாக் அவுட்டில் ஒரே பிரிவில் இடம்பெற்று பிரான்ஸ் அணி தோற்று வெளியேறியது.
2வது முறை தங்க காலணி
2022 உலகக்கோப்பையில் 8 கோல்களை அடித்து தங்க காலணி விருதை வென்ற பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே, 2026 கால்பந்து உலகக்கோப்பையிலும் 10 கோல்கள் அடித்து தங்க காலணி விருதை தட்டிச் சென்றார்.
எம்பாப்பே வரலாற்று சாதனை
கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு வீரர் 2 முறை இதுவரை தங்க காலணி விருதை வென்றிராத நிலையில், முதல் வீரராக வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார் எம்பாப்பே.
அதேபோல கோல்டன் பூட் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு எந்தவொரு வீரரும் இரட்டை இலக்கத்தில் கோல்கள் அடிக்காத நிலையில், முதல் வீரராக 10 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.
உலகக்கோப்பையில் அதிக கோல்கள் - எம்பாப்பே சாதனை
கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்திருந்த மெஸ்ஸியை பின்னுக்குதள்ளி 22 கோல்களுடன் முன்னிலை வகிக்கிறார். மெஸ்ஸி 21 கோல்களுடன் பின்தங்கியுள்ளார்.
27 வயதான எம்பாப்பே10 கோல்களை அடித்ததோடு, மற்ற வீரர்கள் 4 கோல்கள் அடிப்பதற்கும் துணையாக நின்றார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் பிரான்ஸ் அணியின் கிலியன் எம்பாப்பே 10 கோல்கள் மற்றும் 4 அசிஸ்ட்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 8 கோல்கள் மற்றும் 4 அசிஸ்ட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம் 7 கோல்கள் மற்றும் ஒரு அசிஸ்ட் செய்துள்ளார். நார்வேயின் எர்லிங் ஹாலாண்ட் அசிஸ்ட் ஏதுமின்றி 7 கோல்களை அடித்துள்ளார்.
================