சிஎஸ்கே அணியிலிருந்து விடைபெற்றார் தல தோனி! ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு குட்பை. இனி புதிய அவதாரம்!

18 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான வீரராக பயணத்தை முடித்துக்கொண்டார் மகேந்திர சிங் தோனி. இனி 2027 ஐபிஎல் தொடரிலிருந்து அணியின் Team Mentor ஆக செயல்பட உள்ளார்...
MS Dhoni's CSK Journey Takes a New Turn; Set to Become Team Mentor in IPL 2027
MS Dhoni's CSK Journey Takes a New Turn; Set to Become Team Mentor in IPL 2027Google
1 min read

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி :

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய செய்தியாக மகேந்திர சிங் தோனியின் ஓய்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அடையாளமாக விளங்கிய தோனி, தற்போது ஐபிஎல் வீரராக தனது பயணத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று (நவம்பர் 17) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், 2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தோனி அணியின் Team Mentor ஆகப் புதிய பொறுப்பை ஏற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

18 ஆண்டுகால சிஎஸ்கே பயணம்:

2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

அப்போது தொடங்கிய அவரது பயணம், சென்னை அணியின் வெற்றிப் பயணமாகவும் மாறியது.

தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதுதவிர, 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.

தோனியின் ஐபிஎல் சாதனைகள்:

தனது ஐபிஎல் பயணத்தில் தோனி 278 போட்டிகளில் விளையாடி 5,439 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 24 அரைசதங்களும் அடங்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் 272 போட்டிகளில் விளையாடி 5,314 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டவர் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார். 226 போட்டிகளில் கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளார்.

இனி சிஎஸ்கே அணியின் Team Mentor:

தோனியின் ஓய்வு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் உணர்வுபூர்வமாகப் பேசியுள்ளார்.

2008ஆம் ஆண்டிலேயே தோனியை அணியில் சேர்க்க வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும், அது தனது மிகச் சிறந்த முடிவுகளில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

====================