
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி :
Neeraj Chopra in Javelin Final at World Athletics Championships 2025 : ஈட்டி எறிதல் போட்டியில் உலக அளவில் இணையற்ற வீரராக திகழ்பவர் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆடவர் ஈட்டி எறிதல்(Men's Javelin) பிரிவில் அசத்தலான துவக்கத்துடன் மிரட்டினார் நீரஞ் சோப்ரா.
முதல் முயற்சியில் அசத்திய நீரஜ் சோப்ரா:
முதல் முயற்சியிலேயே இறுதிப்போட்டிக்கு அவர் தகுதி பெற்றார். நடப்பு சாம்பியனான நீரஜ், 84.50 மீட்டர் என்ற தகுதி இலக்கைத் தாண்டி நீரஜ் சோப்ரா தனது ஈட்டியை 84.85 மீட்டர் தூரத்திற்கு எறிந்து, குரூப் ஏ பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
ஜூலியன் வெபர் 82.21 மீட்டர் தூரம் :
நீரஜ் சோப்ராவின் முக்கிய போட்டியாளரான ஜூலியன் வெபர், 87.21 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இரண்டாவது வீரரானார். போலந்தின் டேவிட் வெக்னர், தனது தனிப்பட்ட சிறந்த முயற்சியாக 85.67 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து, இறுதிப்போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார்.
தங்கப் பதக்கத்திற்கான வலுவான போட்டியாளரான ஜக்குப் வாட்லெஜ், 84.11 மீட்டர் என்ற சீசனின் சிறந்த முயற்சியுடன் நான்காவது இடத்தைப் பிடித்து, தகுதி பெறும் வாய்ப்பை தவற விட்டார். இந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மேலும் படிக்க : உலகின் நம்பர் 1 வீரர்: ஈட்டி எறிதலில் சாதித்த நீரஜ் சோப்ரா
இந்தியரான சச்சின் யாதவ் தகுதி :
குரூப் ஏ பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முயன்ற மற்றொரு இந்தியரான சச்சின் யாதவ்(Sachin Yadav), முதலில் 80.16 மீட்டர் தூரம் எட்டி எறிந்தார். இரண்டாவது முயற்சியில் 83.67 மீட்டராக மேம்படுத்தி, இறுதிப்போட்டியை நெருங்கினார். 27 வயதான நீரஜ் சோப்ரா(Neeraj Chopra Age), 2023ம் ஆண்டு புடாபெஸ்டில் 88.17 மீட்டர் தூரம் எறிந்து உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா என்பது நினைவுகூரத்தக்கது.
==============