ICC T20 World Cup : ”33 பந்துகள், 10 பவுண்டரி, 8 சிக்ஸ்ர், சதம் விளாசல் : நியூசிலாந்தின் ஃபின் ஆலன் வரலாற்று சாதனை

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 33 பந்துகளில் சதம் அடித்த நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன், ரோஹித் சர்மா சாதனையை முறியடித்தார்.
New Zealand batsman Finn Allen broke Rohit Sharma's record by scoring a century in 33 balls in T20 cricket history
New Zealand batsman Finn Allen broke Rohit Sharma's record by scoring a century in 33 balls in T20 cricket historygoogle
1 min read

தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து மோதல்

Finn Allen smashes fastest T20 World Cup hundred ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில், தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின.

தென் ஆப்பிரிக்கா 169 ரன்கள்

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய, தென் ஆப்பிரிக்கா களமிறங்கி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ரோ ஜான்சன் 55 ரன்கள் சேர்த்தார்.

அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து

170 ரன்கள் என்ற ஸ்கோரை 12.5 ஓவர்களில் எட்டியது நியூசிலாந்து. 1 விக்கெட் இழப்புக்கு 12.5 ஓவர் முடிவில் 173 ரன்களை குவித்த அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த ஃபின் ஆலன், டிம் செய்பர்ட். இருவரும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை விளாசித் தள்ளினர்.

ரோஹித் சாதனை முறியடிப்பு

33 பந்துகளில் சதம் அடித்து ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார் ஃபின் ஆலன். உலகக் கோப்பைப் போட்டியில் வேகமான சதம் அடித்து புதிய மைல்கல்லையும் அவர் உருவாக்கினார்.

அதிரடி காட்டிய ஃபின் ஆலன்

ஃபின் ஆலனின் அதிரடியை கண்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஆச்சரியமடைந்தது. 33 பந்துகளில் சதத்தை எட்டி மிரட்டினார். 10 பவுண்டரிகள் மற்றும் 8 அற்புதமான சிக்ஸர்களை விளாசி தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை பிரமிக்க வைத்தார்.

அரை சதத்தை எட்ட 19 பந்துகளை எடுத்துக் கொண்ட ஃபின் ஆலன், அடுத்த 14 பந்துகளில் விளையாடி வெறும் 33 பந்துகளில் சதம் அடித்தார். கடைசி 10 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து தனது சதத்தை எட்டினார்.

ரோஹித் சாதனை முறியடிப்பு

2017ல் இலங்கைக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் வேகமான சதம் அடித்து ரோஹித் சர்மா சாதனை படைத்திருந்தார்.

இப்போது, ஃபின் ஆலன் பல ஆண்டுகளாக ரோஹித் சர்மா வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். 33 பந்துகளில் சதம் அடித்து உலகக் கோப்பைப் போட்டியில் வேகமான சதம் அடித்து புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளார்.

=====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in