இந்தியா வரும் நியூசி.யின் ODI, t20 அணி: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
New Zealand squad for ODI and T20 series against India announced
New Zealand squad for ODI and T20 series against India announced
1 min read

நியூசிலாந்து அணி வருகை

நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

ஒருநாள், டி 20 போட்டிகள்

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜனவரி 11ம் தேதி தொடங்க இருக்கிறது. 2026ம் ஆண்டில் இந்திய அணி விளையாடப் போகும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது. நியூசிலாந்து தொடர் மற்றும் பிப்ரவரி மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் அணியில் இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருநாள் தொடருக்கான அணி

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), வில் யங், டெவோன் கான்வே, க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜெடன் லெனாக்ஸ்

ஹென்றி நிக்கோல்ஸ், ஜேக் போல்க்ஸ், கைல் ஜேமிசன், கிரிஸ்டியன் கிளார்க், ஆதி அசோக், ஜோஷ் கிளார்க்சன், மிட்ச் ஹே, நிக் கெல்லி, மைக்கேல் ரே.

டி20 தொடருக்கான அணி

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, மார்க் சேப்மன், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல்

டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், ஜேக்கப் டபி, ஜேக் போல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், பெவன் ஜேக்கப்ஸ், டிம் ராபின்சன், சோதி.

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த மிட்செல் சாண்ட்னர் இப்போது முழு பிட்னஸுடன் இருப்பதால், அவருக்கு மீண்டும் டி20 அணிக் கேப்டன் பதவியை கொடுத்துள்ளனர். ஒருநாள் அணியை, மைக்கேல் பிரேஸ்வெல் வழிநடத்துகிறார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் தொடர்களில் அபாரமாக செயல்பட்ட இளம் வீரர்கள் ஜெய்டன் லென்னாக்ஸ், கிறிஸ்டின் கிளர்க், பிவோன் ஜாகப்ஸ், டிம் ராபின்சனுக்கு, இந்திய சுற்றுப் பயணத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு அதிக க்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே, கேன் வில்லியம்சன், ராசின் ரவீந்திரா, ஜாகப் டபி, வில் ஒருர்க், பிளேர் டிக்னர் ஆகியோருக்கு, இந்திய சுற்றுப் பயணத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in