35,000 பேர் மட்டும் அனுமதி: சின்னசாமி மைதானம், அரசு நிபந்தனை

2025 கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளை சில நிபந்தனைகளுடன் நடத்தலாம் என கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Only 35,000 people allowed: Karnataka government orders Chinnaswamy stadium
Only 35,000 people allowed: Karnataka government orders Chinnaswamy stadiumgoogle
1 min read

35,000 பேருக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து , அணியின் வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது .

அப்போது மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி , 11 பேர் உயிரிழந்தனர். இதன் விளைவாக அங்கு 35,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

தானாக முன்வந்து வழக்குப்பதிவு

அதிக அளவு மக்கள் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவத்தை கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவங்கியது .

இழப்பீடு

இந்த பிரச்னையில் ஆர்சிபி அணி நிர்வாகிகள் சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது ஆர்சிபி நிர்வாகம்.

குன்ஹா குழு விசாரணை

நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் அரசாங்க குழுவை அமைத்து விசாரணையை தொடங்கியது . இந்தச் சூழலில், இனிவரும் ஐபிஎல் போட்டிகள் மட்டுமில்லாமல் எந்தப் போட்டியும் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்படாது என்றும், இங்த மைதானத்திற்கு பதிலாக வேறொரு மைதானம் கட்டப்படும் எனவும் தகவல் வெளியானது.

குன்ஹா அறிக்கையின் நிபந்தனை

குன்ஹா அறிக்கையின்படி சில நிபந்தனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அறிக்கையின்படி அதிகபட்சமாக 35,000 பேருக்கு மட்டும் அனுமதி மற்றும் இன்னும் பிற நிபந்தனைகளையும் குறிப்பிட்டுள்ளது .

துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கருத்து

இளைஞர்கள் மற்றும் கிரிக்கெட் உலகின் நலனுக்காக, கர்நாடக அரசு எதிர்காலத்தில் அனைத்து போட்டிகளையும் பெங்களூருவில் நடத்த அனுமதித்துள்ளதாகவும் மற்றும் சில நிபந்தனைகளையும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது .

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in