இந்தியாவுடன் ஆட மறுக்கும் பாகிஸ்தான் : ஐசிசி தீர்ப்பு!

Pakistan boycott T20 WC against India : அணி, டி20 உலகக் கோப்பை 2026-இல் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில் ஐசிசி திங்கட்கிழமைக்குள் இறுதி தீர்ப்பை வழங்குகிறது.
Pakistan boycott ICC Men's T20 World Cup against India ICC Final Verdict on Monday here is Why?
Pakistan boycott ICC Men's T20 World Cup against India ICC Final Verdict on Monday here is Why?Source : ICC T20 World Cup 2026 Highlights
1 min read

இந்தியாவுடன் ஆட மறுப்பு

Pakistan boycott ICC Mens T20 World Cup against India : டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி, இலங்கையில் நடைபெறுவதாக இருந்த நிலையில் பாகிஸ்தான் ஆணியானது இந்தியாவுடன் ஆட மறுப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு ஐசிசி கண்டனங்களையும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது..

பாகிஸ்தான் பதில்

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விலகுவதாக தெரிவித்த பாகிஸ்தான் அணி , எஞ்சிய லீக் போட்டிகள் அனைத்திலும் பங்கேற்போம் எனத் தெரிவித்துள்ளது .

ஐசிசியின் முடிவு

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐசிசி, ‘‘இதுகுறித்து இன்னமும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்,எங்களை அனுகவில்லை என்றும் பாகிஸ்தானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுதான், போட்டிகளை இலங்கைக்கு மாற்றினோம். அவர்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியப் பிறகு, இப்படி நடந்துகொள்வது சரியல்ல’’ எனத் தெரிவித்துள்ள ஐசிசி திங்கட்கிழமைக்குள் இறுதி தீர்ப்பை வழங்குகிறது

பெரிய இழப்பு

இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் விளையாட மறுக்கும் வேளையில் அது ரத்தாகும் நிலை ஏற்படும் போது , அது விளம்பரதாரர்கள், போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

இறுதி முடிவு

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் 240+ கோடி வழங்கப்படும் சூழலில் , அந்த தொகையில் பாதி தொகையை விளம்பரதாரர்கள், போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுனவங்களுக்கு கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது .

சலுகைகளில் இழப்பு

ஐசிசியின் மூலம் வழங்கப்படும் சில சலுகைகளும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்காமல் போகலாம் என்றும் உள்ளூர் கிரிக்கெட்டை பலப்படுத்த வழங்கப்படும் மேம்பாட்டு நிதியை நிறுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் ஐசிசியின் உத்தரவுகளை மதிக்கவில்லை என்றால், நிதியை நிறுத்த ஐசிசிக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிற்கு பெரிய இழப்பு

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்காத நிலையில் பாகிஸ்தானுக்கு, 2 புள்ளிகள் மட்டும் இழப்பு கிடையாது முக்கியமாக நெட் ரன்ரேட்டிலும் பெரிய அடி விழும் என் கூறப்படுகிறது

இதனால், லீக் சுற்றில் அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் தோற்றால், லீக் சுற்றுடன் வெளியேறும் நிலைமை கூட ஏற்படலாம்.

கடந்த டி20 உலகக் கோப்பையில், அமெரிக்காவிடம் தோற்று, லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in