கிராண்ட் செஸ் டூரில் வரலாறு படைத்த பிரக்ஞானந்தா: பட்டம் வென்ற முதல் இந்தியர்...

சர்வதேச செஸ் அரங்கில் புதிய வரலாறு படைத்த ஆர். பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்...
Praggnanandhaa Creates History in Grand Chess Tour: Becomes the First Indian to Win the Title!
Praggnanandhaa Creates History in Grand Chess Tour: Becomes the First Indian to Win the Title!Google
1 min read

அமெரிக்காவில் நடைபெற்ற போட்டி :

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா பெற்றார்.

உலகளவில் மிகவும் உயரிய செஸ் தொடர்களில் ஒன்றான கிராண்ட் செஸ் தொடரில் டாப் 10 கிராண்ட் மாஸ்டர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்.

இந்தத் தொடரின் இறுதிப்போட்டி, அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும் பங்கேற்றிருந்தார்.

அரை இறுதியில் பின்தங்கியிருந்த பிரஃஞானந்தா :

இறுதிப் போட்டியின் முதல் 2 கிளாசிக்கல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் கரானாவைவிட 9 - 3 என்ற புள்ளிகள் கணக்கில் பிரக்ஞானந்தா பின்தங்கியிருந்தார்.

இருப்பினும், ராபிட் சுற்று ஆட்டங்களில் அமெரிக்க வீரர் கரானாவை எதிர்த்து, சிறப்பாக விளையாடி பிரக்ஞானந்தா முன்னிலை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, பிளிட்ஸ் ஆட்டங்களை பிரக்ஞானந்தா டிரா செய்ததால், புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இறுதிச்சுற்றில் கடுமையாக போராடிய பிரஃஞானந்தா :

இறுதியாக, 15 - 13 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றார்.

மேலும், சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத்தொகையாக சுமார் ரூ.1.90 கோடி வழங்கப்பட்டது.

ரூ.1.90 கோடி பரிசுத் தொகை:

இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, 2026 கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானாவை 15-13 என்ற கணக்கில் வீழ்த்திய பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

மத்திய அமைச்சர் எல் முருகன் வாழ்த்து :

மத்திய அமைச்சர் எல். முருகன் கிராண்ட் செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் பிரஃஞானந்தா எனவும் அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளபதிவில் பதிவிட்டிருப்பது

"இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஃபேபியானோ கருவானா அவர்களை வீழ்த்தி பெற்றுள்ள இந்தச் சிறப்புமிக்க வெற்றி, நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த உத்வேகமாக அமையும்.

பிரக்ஞானந்தா அவர்கள் தனது செஸ் பயணத்தில் மேலும் பல உயரங்களைத் தொட்டு, இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்" என பதிவிட்டிருந்தார் .

==========

logo
Thamizh Alai
www.thamizhalai.in