’25 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில்..’ : டெஸ்ட் தொடரை வென்ற SA

South Africa Wins India Test Series 2025 Highlights in Tamil : இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி, தென்னாப்பிரிக்கா அணி வரலாறு படைத்து இருக்கிறது.
South Africa has created history by winning the Test series against India
South Africa has created history by winning the Test series against IndiaANI
1 min read

2 போட்டிகள் - டெஸ்ட் தொடர்

South Africa Wins India Test Series 2025 Highlights in Tamil : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிகா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டை ஏற்கனவே கைப்பற்றி இருந்து தென்னாப்பிரிக்கா, 2வது டெஸ்ட்டையும் வசப்படும் முனைப்படும் களமிறங்கியது. இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் களம் கண்டது.

தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவிப்பு

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான பேட்டிங் மூலம் 489 ரன்களைக் குவித்தது. தனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

சொதப்பிய இந்திய வீரர்கள்

முதல் இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர் ஜெஸ்வால் மட்டும் அரை சதம் கடந்து 58 ரன்கள் சேர்த்தார். அவரை தவிர்த்து அனைத்து வீரர்களும் மிகவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ந்தியாவுக்கு இமாலய இலக்கு

288 ரன்கள் முன்னிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடியது. அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 250 ரன்கள் சேர்த்தது. 538 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

நிலைகுலைந்த இந்தியா

இரண்டாவது இன்னிங்சிலாவது விக்கெட்டுகளை இழக்காமல் இந்திய அணி போட்டியை டிரா செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சை இந்திய வீரர்களை நிலைகுலையச் செய்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வீரர்கள் பெவிலியன் திரும்பினர்.

இந்திய அணி படுதோல்வி

தோல்வியை தவிர்க்கும் வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 139 பந்துகளை எதிர் கொண்டு நேரத்தைக் கடத்தினார். அதே போன்று ரவீந்திர ஜடேஜா 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில், தோல்வியை தழுவுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்பு 2004ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற டெஸ்ட் போட்டியில், 342 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை எதிர்கொண்டது.

வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா

டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய ஸ்கோர் வித்தியாசத்துடன் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது இந்த போட்டியில் தான். அதுமட்டுமின்றி 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை அந்த அணி கைப்பற்றி வரலாறு படைத்து இருக்கிறது. ஆட்ட நாயகனாக மார்கோ யான்சனும், தொடர் நாயகனாக, சீமான் யார்மோரும் தேர்வானார்கள்.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in