மகளிர் கிரிக்கெட் அணி “புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா” : ஹர்மன்பிரீத் கவுர் விலகியதால், BCCI நடவடிக்கை...!

இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Smriti Mandhana has been appointed as the new captain of the Indian women's cricket team.
Smriti Mandhana has been appointed as the new captain of the Indian women's cricket team.google
1 min read

ஹர்மன்ப்ரீத் கவுர் விலகல்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவித்தார். இதையடுத்து அணியின் அடுத்த கேப்டனை அறிவித்துள்ளது பிசிசிஐ.

டி20 அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா

வரும் 16ம் தேதி அன்று இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்க உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் முடிந்ததும் 23 முதல் 28-ம் தேதி வரையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடைபெறுகிறது.

இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுபவம் வாய்ந்த வீராங்கனை

30 வயதான ஸ்மிருதி மந்தனா, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ஒருவராவார். மேலும், WPL தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வழிநடத்தி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்.

அணியை வழிநடத்துவது பாக்கியம்

இந்திய அணியை வழிநடத்துவது தனக்குக் கிடைத்த மாபெரும் கவுரவம் என்றும், இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அணி வீரர்களுடன் இணைந்து முழு முயற்சியுடன் உழைப்பேன் என்றும் ஸ்மிருதி மந்தனா தெரிவித்தார்.

தற்காலிக கேப்டனாக இருந்தவர்

ஏற்கனவே 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் பதினெட்டு டி-20 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்ற ஸ்மிருதி மந்தனா, தற்போது முழுநேர கேப்டனாக தனது பயணத்தை தொடங்க உள்ளார்.

ஸ்மிருதியின் நீண்ட கால அனுபவம் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கும் என்று பிசிசிஐ தலைவர் மிதுன் மன்காஸ் மற்றும் செயலாளர் தேவாஜித் சைகியா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்திய அணிக்காக 11,000 ரன்கள்

இந்திய அணிக்காக 9 டெஸ்ட், 120 ஒருநாள் மற்றும் 179 டி20 போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா விளையாடி உள்ளார். மொத்தம் 11,066 ரன்கள் எடுத்துள்ளார்.

எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். இந்திய மகளிர் அணியை 18 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் ஸ்மிருதி வழிநடத்தி உள்ளார். இப்போது முழுநேர கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in