”62 ரன்கள் எடுத்தால்” : சுப்மன் கில் சாதனையை முறியடிக்கும் மந்தனா!

Smriti Mandhana Runs in All Format 2025 : சர்வதேச கிரிக்கெட்டில் 2025ம் ஆண்டில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைக்க ஸ்மிருதி மந்தனா இன்னும் 62 ரன்களே தேவை.
Smriti Mandhana needs just 62 runs to become highest run-scorer in All Format international cricket year 2025
Smriti Mandhana needs just 62 runs to become highest run-scorer in All Format international cricket year 2025Jio Hotstar - India Women vs Sri Lanka Women Match Highlights
1 min read

இந்தியா - இலங்கை டி20

Smriti Mandhana Runs in All Format 2025 : இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கும் இலங்கை மகளிர் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

வொயிட் வாஷ் செய்யுமா இந்தியா?

இந்தநிலையில், 5ஆவது மற்றும் கடைசிப் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று இரவு நடைபெற இருக்கிறது. தொடரை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் இந்தியாவும் ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் இலங்கையும் போராடும் என்பதால், இன்றையப் போட்டியும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

சாதிக்க காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா

இன்றையப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா 62 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 2025ஆம் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைப்பார்.

வீராங்கனையாக முதலிடம்

ஸ்மிருதி மந்தனா, இந்த ஆண்டு இதுவரை 1,703 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ரன்னே, ஓர் ஆண்டில் சர்வதேச அளவில் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாக உள்ளது.

சுப்மன் கில் சாதனை - முறியடிப்பாரா மந்தனா?

அதேநேரத்தில், இந்த ஆண்டு ஆண்கள் தரவரிசையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 1,764 ரன்களுடன் ஷுப்மான் கில் முதலிடத்தில் உள்ளார். அவரது சாதனையை முறியடிக்க ஸ்மிருதிக்கு இன்னும் 62 ரன்கள் மட்டுமே தேவை.

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள்

இன்றையப் போட்டியில் 62 ரன்களை குவித்து, சாதனை படைப்பார் ஸ்மிருதி மந்தனா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 28 வயதான ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை மற்றும் ஒட்டுமொத்தமாக நான்காவது வீராங்கனை என்ற சாதனைக்கு அண்மையில் வசப்படுத்தினார். இலங்கைக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின்போது, ஸ்மிருதி மந்தனா இந்த மைல்கல்லை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in