FIFA : ”இறுதிப் போட்டியில் ஸ்பெயின், பிரான்ஸ் கனவு தகர்ந்தது” : 37 போட்டிகளில் தொடர்வெற்றி, கோப்பையை வெல்ல முனைப்பு..!

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் பிரான்சை 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Spain advanced to the final after defeating France 2-0 in the World Cup semi-final
Spain advanced to the final after defeating France 2-0 in the World Cup semi-finalAI generated
1 min read

பிரான்ஸ் - ஸ்பெயின்

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏடி&டி மைதானத்தில் நடைபெற்றது இந்தப் போட்டி இறுதிப்போட்டிக்கு இணையான விறுவிறுப்பாக அமைந்தது.

ஸ்பெயினுக்கு பெனால்டி வாய்ப்பு

முதல் பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமின் யமால் பிரான்ஸ் கோல் பகுதிக்கு அருகே கீழே தள்ளி விடப்பட்டதால், ஸ்பெயினுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

கோல் அடித்த மைக்கேல் ஓயர்சபால்

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய நட்சத்திர வீரர் மைக்கேல் ஓயர்சபால், பிரான்ஸ் கோல்கீப்பர் மைக் மைக்னானை தாண்டி பந்தை அடித்து முதல் கோல் பெற்றுத் தந்தார்.

பிரான்சுக்கு நெருக்கடி

இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் அடித்த 5-வது கோலாகும். இந்த கோலால் ஸ்பெயின் அணி 1-0 என முன்னிலை பெற்றதுடன், பிரான்ஸ் அணிக்கு நெருக்கடி ஆரம்பமானது.

58 வது நிமிடத்தில் 2வது கோல்

இரண்டாவது பாதியிலும் ஸ்பெயின் அணியின் ஆதிக்கம் தொடர, 58வது நிமிடத்தில் டேனி ஆல்மோ கொடுத்த துல்லியமான பாஸைப் பெற்ற பெட்ரோ போரோ, மிக நேர்த்தியாக கோல் அடித்து ஸ்பெயினின் வெற்றியை 2-0 என உறுதி செய்தார்.

பிரான்ஸ் முயற்சிகள் தோல்வி

பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் தொடர்ந்து வீரர்களை மாற்றிப் பார்த்தும், ஸ்பெயின் அணியின் பலமான தற்காப்பு அரணை முறியடிக்க முடியவில்லை.

எம்பாப்பே முயற்சிகள் தோல்வி

இந்தத் தொடரில் அதிக கோல் அடித்து தங்க காலணி விருதுக்கான பந்தயத்தில் முன்னிலையில் இருந்த பிரான்ஸ் கேப்டன் கைலியன் எம்பாப்பேவை ஸ்பெயின் வீரர்கள் பந்துடன் நகரவே விடாமல் கட்டிப் போட்டனர்.

பிரான்ஸ் தோல்வி

இந்தத் தோல்வியின் மூலம், 2018 சாம்பியனான மற்றும் 2022 ரன்னர்-அப்பான பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.பிரான்ஸ் அணி மியாமியில் நடைபெறவுள்ள 3-வது இடத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது.

37 போட்டிகளில் தொடர் வெற்றி

ஸ்பெயின் அணி கடந்த 37 போட்டிகளாக தோல்வியே சந்திக்காத அணியாக வரலாற்று சாதனை படைத்துள்ளது. கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.

2023ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு எந்தவொரு சர்வதேச போட்டியிலும் ஸ்பெயின் தோற்கவில்லை.

ஐரோப்பிய சாம்பியனாக இருக்கும் ஸ்பெயின், உலகக் கோப்பையையும் வென்று புதிய வரலாறு படைக்கும் முனைப்பில் உள்ளது.

ஞாயிறன்று இறுதிப்போட்டி

ஞாயிற்றுக்கிழமை அன்று நியூஜெர்சியில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி, அர்ஜென்டினா - இங்கிலாந்து அரையிறுதிப் போட்டியின் வெற்றியாளரை எதிர்கொள்கிறது.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in