FIFA WC Final : "டோரஸ் அடித்த ஒரு ஷாட், வீழ்ந்தது மெஸ்ஸி படை” : 16 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயின் கையில் வெற்றிக்கோப்பை.!

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது ஸ்பெயின்.
Spain won the World Cup football final by defeating the defending champions, Argentina
Spain won the World Cup football final by defeating the defending champions, ArgentinaAI generated
2 min read

அர்ஜென்டினா - ஸ்பெயின்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில், ஆட்டம் முழுவதும் ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை முழுமையாக முடக்கி ஆதிக்கம் செலுத்தியது.

அர்ஜென்டினாவை முடக்கிய ஸ்பெயின்

இருபாதி ஆட்டங்களிலும் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்கவே இல்லை. அர்ஜென்டினா அடித்த ஒரு ஷாட் கூட கோல் போஸ்ட் அருகே செல்லவில்லை. இதை வைத்தே ஸ்பெயின் எப்படி ஆடியது என்பதை புரிந்து கொள்ளலாம்.

அர்ஜென்டினா அபார ஆட்டம்

இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி அர்ஜென்டினாவை கட்டுக்குள் வைத்து இருந்தது. ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவின் கோல் எல்லையை நோக்கி 20 முறை பந்தை கொண்டு சென்று தாக்குதல் நடத்தியது. அதில் 11 ஷாட்டுகள் இலக்கை நோக்கி, அதாவது கோல் போஸ்ட்டை நோக்கி பாய்ந்தன.

ஆனால், அர்ஜென்டினா அணியால் வெறும் 3 முறை மட்டுமே கோல் அடிக்க முயற்சி செய்ய முடிந்தது. 90 நிமிட ஆட்டத்திலும் ஸ்பெயின் 68 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. அர்ஜென்டினா வெறும் 32 சதவீதம் மட்டுமே பந்தை தன் வசம் வைத்திருந்தது.

ஸ்பெயின் வீரர்கள் தங்களுக்குள் 803 பாஸ்கள் செய்து அசத்தினர். அவர்களின் பாஸ் துல்லியம் 90 சதவீதமாக இருந்தது. இதற்கு நேர்மாறாக, அர்ஜென்டினா அணி 445 பாஸ்கள் மட்டுமே செய்ததுடன், அவர்களின் துல்லியம் 78 சதவீதமாக மட்டுமே இருந்தது.

ஒட்டுமொத்தமாக, அர்ஜென்டினாவை விட பல மடங்கு சிறப்பாக செயல்பட்டு ஸ்பெயின் தகுதியான வெற்றியைப் பெற்றுள்ளது.

கோப்பையை வென்று கொடுத்த டோரஸ்

கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில், ஸ்பெயின் அணியின் மாற்று ஆட்டக்காரராகக் களம் புகுந்த ஃபெரான் டோரஸ் பந்தை அர்ஜெண்டினாவின் வலைக்குள் செலுத்தி ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர வைத்தார். அந்த ஒரு கோலே ஸ்பெயினின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

அர்ஜெண்டினா அணியின் கோல்கீப்பரான எமிலியானோ மார்டினெஸ், இந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் கோல் முயற்சிகளைப் பலமுறை சாதுரியமாகத் தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் கூடுதல் நேரம் வரை ஸ்பெயின் அணியை கோல் எதுவும் வாங்காமல் வைத்திருந்ததில் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. ஆனால், கூடுதல் நிமிடத்தில் கோட்டை விட, ஒரு கோலே ஸ்பெயினின் கையில் கோப்பையை திணித்தது.

நடுகள வீரர் வெளியேற்றம் - அர்ஜென்டினா பின்னடைவு

முன்னதாக, ஆட்டத்தின் 90+3-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் நடுகள வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதால் அர்ஜெண்டினா அணி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

அசைக்க முடியாத அணியாக ஸ்பெயின்

லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை போட்டியாகக் கருதப்பட்ட இதில், ஸ்பெயின் அணியின் பலமான தற்காப்பு ஆட்டத்தால் அர்ஜெண்டினாவால் கோல் எதுவும் பெற முடியாமல் போனது.

16 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்

இதன் மூலம், யூரோ 2024 சாம்பியனான ஸ்பெயின், தற்போது உலகக் கோப்பையையும் கைப்பற்றி சர்வதேச கால்பந்து உலகின் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்துள்ளது.

16 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்றுள்ளதால், ஸ்பெயின் ரசிகர்கள் கொண்டாட்டி தீர்த்து வருகிறார்கள்.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in