”இரும்பு சுவராய் கோல்-கீப்பர் உனாய் சைமன்” : 4 போட்டிகள், கோல் அடிக்க விடாமல், டிஃபென்ஸ் ஆட்டத்தில் ஸ்பெயின் சாதனை...!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை எதிரணியினரை 4 போட்டிகளிலும் கோல் அடிக்க விடாமல் தடுத்து சாதித்து இருக்கிறது. ஸ்பெயின் அணி.
Spanish team achieved remarkable feat in  World Cup, preventing their opponents from scoring in all four matches
Spanish team achieved remarkable feat in World Cup, preventing their opponents from scoring in all four matchesAI generated
1 min read

இரும்பு டிஃபென்ஸ் - ஸ்பெயின்

2026 ஃபிஃபா உலகக்கோப்பை வதொடரில் ஸ்பெயின் அணி தங்களின் இரும்பு டிஃபென்ஸ் மூலம் கால்பந்து உலகை அதிரவைத்து வருகிறது.

நாக்அவுட் உட்பட 4 போட்டிகளில் எதிரே விளையாடிய அணியை ஒரே ஒரு கோலும் விடாமல் 4 கிளீன் ஷூட்களை பதிவு செய்து இருக்கிறது ஸ்பெயின்.

ரவுண்ட் 16ல் ஸ்பெயின்

16 ஆண்டுகளாக நாக்அவுட்டில் தடுமாறிய ஸ்பெயின், இந்தமுறை ஆஸ்திரியாவை 3-0 என வீழ்த்தி, ரவுண்ட் 16-க்கு முன்னேறி, வலுவான சவாலை கொடுத்து வருகிறது.

ஸ்பெயின் கோல் அடிக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு எதிராக கோல் அடிப்பது இயலாத காரியம் அப்படின்னு பேச வைக்கிறது ஸ்பெயின் அணி.

ஃபிபா உலகக்கோப்பை யாருக்கு?

உலகக்கோப்பை யாருக்கு என்ற ரேசில், பிரான்ஸ், அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுக்கல் வரிசையில் ஸ்பெயினும் இடம் பெற்று இருக்கிறது.

ஸ்பெயினின் டிஃபென்ஸ் கோட்டையை இதுவரை எந்த அணியாலும் வீழ்த்த முடியவில்லை.

எதிரணியின் முன்கள வீரர்கள் எவ்வளவு முயன்றாலும் ஸ்பெயின் எல்லையை தாண்ட முடியாமல் திணறுகின்றனர் என்பது தான் உண்மை.

ஸ்பெயின் அணியின் கோல்கீப்பரும் இக்கட்டான தருணங்களில் பல அபாரமான சேவ்களை (Saves) செய்து அசத்தி வருகிறார்.

519 நிமிடங்கள் கோல் கீப்பர் சாதனை

கோல்கீப்பர் உனாய் சைமன் (Unai Simon) கடைசியாக கோல் எதையும் விட்டுக் கொடுக்காமல் 519 நிமிடங்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இது ஒரு கோல்கீப்பர் படைத்துள்ள மிக நீண்ட 'கோல் வாங்காத' (unbeaten) சாதனையாகும். 2022 மற்றும் 2026 உலகக்கோப்பை போட்டிகளும் அடங்கும்.

இத்தாலி சாதனை முறியடிப்பு

இதன் மூலம், 1990ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இத்தாலியின் வால்டர் ஜெங்கா (Walter Zenga) படைத்திருந்த 517 நிமிடங்கள் என்ற சாதனையை ஸ்பெயின் கோல்கீப்பர் உனாய் சைமன் முறியடித்துள்ளார்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in