
அமெரிக்க ஓபன் டென்னிஸ் :
Carlos Alcaraz Wins US Open Tennis Championship 2025 : கிரான்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெற்றன. ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு 22 வயதே ஆன ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், (Carlos Alcaraz) உலகின் முதல்நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரை (Jannik Sinner) எதிர்கொண்டார்.
கடுமையான போட்டி, சவாலில் வென்ற அல்காரஸ் :
கடுமையான இந்தப்போட்டி 2 மணி 42 நிமிடங்களுக்கு நீடித்தது. அல்காரஸ் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் செட்டை 6-2 என வென்றார். இரண்டாவது செட்டில் ஜேனிக் சின்னர் 6-3 என வெற்றி பெற்ற அல்காரசுக்கு அழுத்தம் கூடியது. இருப்பினும், நிதானத்தை இழக்காத அவர், மூன்றாவது செட்டை 6-1 என்ற கணக்கிலும், நான்காவது செட்டை 6-4 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றார்.
பட்டம் வென்றார் அல்காரஸ் :
6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வாகை சூடிய கார்லோஸ் அல்காரஸ்(Carlos Alcaraz Champion), சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். பட்டம் வென்ற அல்காரஸுக்கு ரூ.43.5 கோடியும், 2வது இடம் பெற்ற ஜேனிக் சின்னருக்கு ரூ.21.5 கோடியும் பரிசாக கிடைத்தது.
சாம்பியன் நாயகன் அல்காரஸ் :
இரண்டாவது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற அல்காரஸ், இதுவரை ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். இரண்டு பிரெஞ்சு ஓபன்கள் (2024, 2025), இரண்டு விம்பிள்டன்கள், (2023, 2024) இரண்டு அமெரிக்க ஓபன்கள் (2022, 2025) ஆகியவை அடங்கும்.
டென்னிஸ் உலகில் முதலிடம் :
இந்த வெற்றியின் மூலம், அல்கராஸ் மீண்டும் ATP தரவரிசையில் உலகின் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறினார். கார்லோஸ் அல்காரஸ்(Carlos Alcaraz Ranking) தனது வாழ்க்கையில் ஐந்தாவது முறையாக நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரஸுக்கு ரூ.43.5 கோடியும், 2வது இடம் பெற்ற ஜேனிக் சின்னருக்கு ரூ.21.5 கோடியும் பரிசு வழங்கப்பட்டன.
====