தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வைபவ் 10 சிக்சர்:தொடரை வென்ற இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான யூத் ஒருநாள் போட்டியில் சூர்யவன்ஷி 10 சிக்சர் விளாச, இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தியது.
Suryavanshi hit 10 sixes in the Youth ODI against South Africa as India clinched the series.
Suryavanshi hit 10 sixes in the Youth ODI against South Africa as India clinched the series.
1 min read

யூத் ஒருநாள் தொடர்

India vs South Africa U19 2nd ODI: India win by 8 wickets after Vaibhav Suryavanshi blitz : தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இளம் இந்திய அணி, மூன்று போட்டி கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று மீண்டும் பெனோனியில் நடந்தது 'டாஸ்' வென்ற தெனாப்பிரிக்கா, பேட்டிங்கை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்

தென்னாப்பிரிக்க அணிக்கு ஜோரிச் (10), அத்னான் (25) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் புல்புலியா 14 ரன் எடுத்தார். டேனியல் 31 ரன்னில் அவுட்டாக, ஜேசன் ராவ்லஸ், 113 பந்தில் 114 ரன் எடுத்து உதவினார்.

தென்னாப்பிரிக்க அணி 49.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் கிஷன் சிங் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

வைபவ் 'அதிரடி'

இந்திய அணிக்கு கேப்டன் பதவியேற்ற வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 6.1 ஓவரில் 67 ரன் சேர்த்த போது, ஆரோன் (20) அவுட்டானார்.

மழையால் ஆட்டம் பாதிப்பு

10 சிக்சர்களை விளாசிய வைபவ், 24 பந்தில் 68 ரன் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 11 ஓவரில் 103/2 ரன் எடுத்த போது, மின்னல், மழை காரணமாக போட்டி சற்றுநேரம் நிறுத்தப்பட்டது.

174 ரன்கள் இலக்கு

மீண்டும் போட்டி துவங்கியதும் இந்திய அணியின் இலக்கு 27 ஓவரில் 174 ரன்கள் என மாற்றப்பட்டது. இந்திய அணி 23.3 ஓவரில் 176/2 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. வேதாந்த் (31), அபிக்யான் (48) அவுட்டாகாமல் இருந்தனர். இரண்டாவது போட்டியையும் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in