T20 WC 2026: நமீபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா!

93 ரன்கள் வித்தியாசத்தில் நமீபிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
T20 WC 2026: The Indian team has achieved a huge victory by defeating the Namibian team by 93 runs:
T20 WC 2026: The Indian team has achieved a huge victory by defeating the Namibian team by 93 runs:source: BCCI
1 min read

T20 WC 2026: The Indian team has achieved a huge victory by defeating the Namibian team by 93 runs:

டி20 உலக கோப்பை

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 18ஆவது லீக் போட்டியில் இந்திய அணியானது நமீபியா அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் அதிரடி ஆட்டம்

முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது நபீபியா அணி. முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை ஆடியது.

நமீபிய அணியை திணறடித்த இஷான்

இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 5 சிக்சர்கள், 6 பவுண்ரிகளுடன் 61 ரன்கள் எடுத்து பந்து வீச்சாளர்களை சற்று திணறடித்தார்.

209 ரன்கள் குவிப்பு

ஹர்திக் பாண்ட்யாவும் 28 பந்தில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். நமீபியா கேப்டன் எராஸ்மஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது.

நமீபிய அணிக்கு அழுத்தம்

இதைத்தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நமீபியா அணியால் நிலைத்து ஆட முடியவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சு நமீபிய அணிக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இருந்தது.

93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அதனால் ஸ்டீன் கேப்ம் 29 ரன், ஜேன் ப்ரிலிங்க் 22 ரன் எடுத்தனர். ஆனால் மற்றவர்களால் நிலைத்து நிற்க முடியாமல் 18.2 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனால் இந்தியா அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா

வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், பாண்ட்யா மற்றும் அக்சர் படேல் தலா விக்கெட் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

15ம் தேதி பாகிஸ்தானுடன் மோதல்

இந்த தொடரின் ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார். அடுத்ததாக இந்திய அணியானது வரும்15ம் தேதி , கொழும்புவில் பாகிஸ்தானுடன் விளையாட உள்ளது.

உலக கோப்பையில் வரலாறு படைத்த இந்தியா

நமீபிய அணியை வீழ்த்தி இந்திய அணி பெற்றுள்ள இந்த வெற்றியானது, டி20 உலக கோப்பை வரலாற்றில் இந்திய பதிவு செய்யும் 10வது தொடர் வெற்றியாகும். இதனால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in