டி-20 உலகக் கோப்பை : நெதர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி !

டி-20 உலக கோப்பை லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 17 ரன்னில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
India won the T20 World Cup league match against the Netherlands by 17 runs:
India won the T20 World Cup league match against the Netherlands by 17 runs:source:bcci,x.com
1 min read

India won the T20 World Cup league match against the Netherlands by 17 runs:

T20 World Cup 2026

2026ஆம் ஆண்டிற்கான 10வது டி-20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் பிப்.7ஆம் தேதிமுதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வரலாற்றில் சாதனை படைத்த இந்தியா

இந்தியா மற்றும் கொழும்புவில் பல முக்கிய லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி வரலாற்றில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

இந்தியா - நெதர்லாந்து அணி மோதல்

இந்நிலையில், இந்தியா, இலங்கையில் 10 வது டி-20 உலகக்கோப்பைத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா , நெதர்லாந்து அணிகள் மோதின.

பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன், அபிஷேக் ஷர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய அணி வீரர்கள் குவித்த ரன்கள்

அபிஷேக் ஷர்மா 3 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 31 பந்தில் 66 ரன்கள் குவித்து ஷிவம் துபே அதிரடியாக விளையாடினார். தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 30 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 34 ரன்கள், திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தனர்.

நெதர்லாந்து அணி

இந்திய அணியின் விளையாட்டிற்கு ஈடு கொடுக்கும் வகையில் நெதர்லாந்து அணி சார்பில் வான் பீக் 3 விக்கெட்டும், ஆர்யன் தத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதயடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. எனினும் , 20 ஓவரில் 176 ரன்களை மட்டுமே நெதர்லாந்து அணியால் எடுக்க முடிந்தது.

லீக் சுற்றில் இந்தியாவின் 4வது வெற்றி

இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் நான்காவது வெற்றி இதுவாகும்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in