

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் 20ம் தேதி தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டி, லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
ரோஹித் சர்மா, கோலி அணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், ஷூப்மன் கில் தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது.
டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாகூர், சவால்களை கொடுக்கும், இங்கிலாந்து ஆடுகளில் விளையாட ஆர்வமாக இருப்பதாக கூறினார்.
இங்கிலாந்தில் அடிக்கடி மாறும் வானிலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
இந்திய அணி புதிய ஆற்றலோடு இருக்கிறது, இளம் வீரர்கள் சாதிக்க துடிக்கிறார்கள்.
திறமையும், இளமையும் சேரும் போது வெற்றி எளிதாகும். எனவே, டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
----