முதல் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பென் டக்​கெட் எடுத்த சதத்தால் இங்கிலாந்து அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து அணி வெற்றி
https://x.com/englandcricket/s
1 min read

லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்ற இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 471 ரன்​களும், இங்​கிலாந்து 465 ரன்​களும் குவித்​தன.

ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 4வது நாள் ஆட்​டத்​தில் 96 ஓவர்​களில் 364 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தது.

371 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இங்​கிலாந்து அணி 4வது நாள் ஆட்​ட

முடி​வில் விக்​கெட் இழப்​பின்றி 21 ரன்​கள் சேர்த்​தது.

கைவசம் 10 விக்​கெட்​கள் முழு​மை​யாக இருந்த நிலை​யில் வெற்​றிக்கு 350 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் இங்​கிலாந்து அணி கடைசி நாள் ஆட்​டத்தை விளை​யாடியது.

ஸாக் கிராவ்​லி​யும், பென் டக்​கெட்​டும் சீராக ரன்​கள் சேர்த்​தனர். பென் டக்​கெட் 121 பந்​துகளில், 14 பவுண்​டரி​களு​டன் சதம் விளாசி​னார். சர்​வ​தேச டெஸ்ட் கிரிக்​கெட்​டில் இது அவரது 6வது சதம்.

மறு​முனை​யில் நிதான​மாக விளை​யாடிய ஸாக் கிராவ்லி அரை சதத்தை கடந்​தார்.

இங்​கிலாந்து அணி 40.5 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 181 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை காரண​மாக ஆட்​டம் சிறிது நேரம் தடைபட்​டது.

இதேபோன்று, 2வது முறையும் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்ட போதும், அது இந்தியாவுக்கு கைகொடுக்கவில்லை.

நிதானமாகவும், உறுதியுடனும் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள், 82 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டினர்.

இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து கைப்பற்றியது.

இரண்டு இன்னிங்சிலும் இந்தியா சிறப்பான ரன்களை குவித்து இருந்தாலும், பவுலிங்கில் ஏமாற்றம் அளித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in