
IND vs ENG 2nd Test Match 2025 : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 5 பேர் சதங்கள் அடித்தும், வெற்றியைப் கைப்பற்ற முடியவில்லை. இங்கிலாந்துக்கு இலக்காக,371 ரன்களை நிர்ணயித்தும் இந்தியா தோற்றது.
முதல் டெஸ்டில், பும்ராவை தவிர எந்த பௌலரும் சிறப்பாக செயல்படவில்லை. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பும்ரா இருக்க மாட்டார் என்பதால், இந்திய அணிக்கு தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இந்திய அணியில், பீல்டிங்கும் மோசமாக இருப்பதால், நிதிஷ் ரெட்டியை சேர்க்க கம்பீர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பும்ராவுக்கு மாற்றாக அர்ஷ்தீப் சிங் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணி வேகப்பந்து வீச்சு துறையில் இடது கை பௌலர் இல்லை. அர்ஷ்தீப் சிங், சமீப காலமாகவே புது பந்தில் மிரட்டலாக வீசி விக்கெட்களை எடுக்கிறார்.
எனவே, 2வது டெஸ்ட்டுக்கான இந்திய உத்தேச அணியில், ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
====