'TIME' இதழின் செல்வாக்கு மிகுந்த வீரர்கள் பட்டியல் : ஸ்மிருதி மந்தனாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

செல்வாக்கு மிகுந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா பெயர்.
'Time' magazine's list of influential athletes: Do you know what rank Smriti Mandhana holds?
'Time' magazine's list of influential athletes: Do you know what rank Smriti Mandhana holds?sports: google
1 min read

'Time' magazine's list of influential athletes: Do you know what rank Smriti Mandhana holds?

செல்வாக்கு மிகுந்த 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 29 வது இடைத்தைப் பிடித்த்கியுள்ளார்.

டைம் இதழ்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளியாகும் உலகப் புகழ்பெற்ற செய்தி இதழ்தான் டைம்.

ஆண்டுதோறும் டைம் இதழ் வணிகம்,கலை,அரசியல்,சமூக சேவை, விளையாட்டு, அரசியல் என பல துறைகளிலும் புகழ் பெற்ற தலைவர்கள், வீரர்கள் பட்டியலை வெளியிடும். டைம் இதழில் பெயர் இடம்பெறுவது என்பதே பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

உலகளாவிய பட்டியலில் ஒரே இந்தியர்

இந்த நிலையில் தான் தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிகுந்த விளையாட்டு வீரர்களின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா இடம்பெற்று அசத்தியுள்ளார். மேலும் உலகளாவிய இந்த பட்டியல் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற புகழுக்குரியவராக ஸ்மிரிதி மந்தனா விளங்குகிறார்.

ஸ்மிரிதி மந்தனாவின் சாதனைகள்

ஒரே வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒருநாள் சர்வதேச ரன்கள் எடுத்த வீராங்கணை, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பதினேழு சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற புகழுக்குரியவர் ஸ்மிரிதி மந்தனா.

கடந்த 2025 ஆம் ஆண்டில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது துணைத்தலைவராக சிறப்பாக பணியாற்றி, அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக சாதனை படைத்தவர்.

தொடர்ந்து தனது சாதனையை அவரே முறியடித்து அந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

29 வது இடத்தில் ஸ்மிருதி மந்தனா

இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த வீரர்களின் பட்டியலில் 29 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

செல்வாக்கு மிக்க வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான்கள்

டைம் இதழின் இந்த பட்டியலில் லெப்ரான் ஜேம்ஸ் கூடைப்பந்து ஜாம்பவான் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவருடன் சேர்த்து கால்பந்து ஜாம்பவான்கள் லியோனல் மெஸ்ஸி,

கிறிஸ்டியானே ரொனால்டோ,டென்னிஸ் ஜாம்பவான் கார்லோஸ் அல்காரஸ், பனிச்சறுக்கு வீராங்கனை எய்லீன் மற்றும் கோல்ஃப் வீரர் மெக்ல்ராய் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்று உள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in