

உலகக்கோப்பை கால்பந்து தொடர்
உலகக் கோப்பை காலபந்து தொடர் படிப்படியாக சூடு பிடித்து வருகிறது. போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா இதுவரை விளையாடிய போட்டிகளில் அசத்தி இருக்கிறது.
அமெரிக்கா vs ஆஸ்திரேலியா
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப்-டி பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான லீக் போட்டி சியாட்டில் மைதானத்தில் நடைபெற்றது.
ஆஸ்திரேலியா சேம்சைட் கோல்
போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பர்கெஸ், தவறுதலாக சேம் சைட் கோல் அடித்ததால், அமெரிக்கா அணி தனது முதல் கோல் கணக்கை தொடங்கியது.
முதல் பாதி முடியும் போது, 43வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் அலெக்ஸ் ஒரு கோல் அடித்து, அணியின் முன்னிலையை 2-க்கு பூஜ்ஜியம் என்று உயர்த்தினார்.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் எவ்வளவு முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. எனவே, 2 க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தனது வெற்றியை உறுதிசெய்த அமெரிக்கா, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
மொராக்கோ வெற்றி
மற்றொரு ஆட்டத்தில் குரூப்-சி பிரிவில் இடம்பெற்றுள்ள மொராக்கோ, ஸ்காட்லாந்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஆட்டம் தொடங்கிய 2 ஆவது நிமிடத்திலேயே மொராக்கோ வீரர் பிராஹிம் கோல் அடித்து அசத்தினார். இறுதியில், 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றது.
=======================