தீப்தி சர்மா : வென்றது உலகக் கோப்பை : DSP பதவி வழங்கி கௌரவம்

Deepti Sharma DSP Post in Uttar Pradesh : உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவி வழங்கி கௌரவித்து இருக்கிறது உத்தர பிரதேச அரசு.
Uttar Pradesh government honored World Cup-winning Indian women's cricketer Deepti Sharma by awarding her DSP post
Uttar Pradesh government honored World Cup-winning Indian women's cricketer Deepti Sharma by awarding her DSP post
1 min read

இந்திய அணிக்கு கோப்பை

Cricketer Deepti Sharma Appointed as DSP by Uttar Pradesh Government : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா. 2025 ICC மகளிர் ODI உலகக் கோப்பை தொடரில் சிறந்த செயல்பாட்டிற்காக ‘தொடர் நாயகி’ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சாதித்த இந்திய மகளிர் அணி

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது. இதன் மூலம் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில், முதன்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

டிஎஸ்பியான தீப்தி சர்மா

வெற்றிக்குப் பிறகு, உத்தர பிரதேச அரசு தீப்தி சர்மாவுக்கு காவல்துறையில் துணை கண்காணிப்பாளர் (DSP) பதவியை அளித்துள்ளது. இது, ‘குஷால் கிலாடி யோஜனா’ (Kushal Kheladi Yojana) திட்டத்தின் கீழ், விளையாட்டு துறை மூலம் மாநில அரசு வழங்கிய கௌரவமாகும்.

கௌரவித்த உத்தர பிரதேச அரசு

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீப்திக்கு DSP யூனிஃபார்ம் அளித்து வாழ்த்தினார். இந்த விருது, தீப்தியின் திறமையை அங்கீகரிக்கும் மாநில அளவிலான மிக உயர்ந்த மரியாதையாகும்.

ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா

தீப்தி சர்மா, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம் வீராங்கனை. 2014ல் இந்திய அணிக்கு அறிமுகமான அவர், சுழற்பந்து வீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து ஆல் ரவுண்டராக விளங்குகிறார்.

தொடர் நாயகி தீப்தி சர்மா

2025 உலகக் கோப்பையில், அவர் 9 போட்டிகளில் 215 ரன்கள் அடித்து, 22 விக்கெட்டுகள் வீழ்த்தி, தொடர் நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இதற்கு தீப்தியின் 4 விக்கெட்டுகள் முக்கிய பங்காற்றின.

தீப்திக்கு குவியும் வாழ்த்து

உலகக் கோப்பையை முதன்முறையாக இந்திய அணி வெல்ல காரணமாக இருந்த தீப்தி சர்மாவுக்கு ஏற்கனவே பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அவருக்கு உத்தர பிரதேச அரசு டிஎஸ்பி பதவி வழங்கி மேலும் புகழ் சேர்த்து இருக்கிறது.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in