யு 19 தொடரில் புதிய வரலாறு : 355 ரன்கள் குவித்த சூரியவன்ஷி

Vaibhav Suryavanshi : இங்கிலாந்து எதிரான யு 19 கிரிக்கெட் தொடரில், இந்திய வீரரான வைபவ் சூர்யவன்ஷி 355 ரன்கள் குவித்து அசத்தினார்.
Vaibhav Suryavanshi scored 355 runs against England series
Indian player Vaibhav Suryavanshi scored 355 runs in U-19 cricket series against Englandhttps://x.com/hashtag/vaibhavsuryavanshi
1 min read

Vaibhav Suryavanshi vs England : இங்கிலாந்து U-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடியது, இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இளம் நட்சத்திரம் வைபஸ் சூர்யவன்ஷி :

வைபவ் சூர்யவன்ஷி(Vaibhav Suryavanshi) நட்சத்திரமாகத் திகழ்ந்தார். சூர்யவன்ஷி இந்தத் தொடரில் சதம் மற்றும் அரைசதங்களும் 355 ரன்கள் எடுத்தது சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டுடன் சேர்ந்து இளையோர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனையாகத் திகழ்கிறது.

ஐபிஎல் 2025-ல் புதிதாக எழுச்சி கண்ட இளம் நட்சத்திரமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, இந்த தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச போட்டிகளிலும் தன்னால் சாதிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.

ரன் குவிப்பில் சூர்யவன்ஷி :

அவர் ஐந்து போட்டிகளில் 71 சராசரி மற்றும் 174.01 ஸ்ட்ரைக்-ரேட்டுடன் 355 ரன்கள் குவித்துள்ளார். இது இருதரப்பு இளையோர் ஒருநாள் சர்வதேசத் தொடரில் அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகும். மேலும் தொடக்க வீரராக 2வது அதிகபட்ச ஸ்கோர்.

300 ரன்களுக்கு மேல், 174 என்ற ஸ்ட்ரைக் ரேட் எடுத்ததே, சூர்யவன்ஷியின் சாதனையாக உள்ளது. இதற்கு முன்பு வங்கதேச வீரர் தவ்ஹித் ஹிருதய் 300 ரன்களுக்கு மேல் எடுத்து இருந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 114.62 மட்டுமே.

சூர்யவன்ஷியின் அதிவேக சதம் :

நான்காவது ஒருநாள் போட்டியில் சூர்யவன்ஷி அடித்த சதம், வெறும் 52 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதால், இளைஞர் ஒருநாள் வரலாற்றில் அதிவேக சதமாகும். அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து 183.33 ஸ்ட்ரைக் ரேட் என்பது, 2013ல் பாகிஸ்தானின் கம்ரான் குமல் 66 பந்துகளில் 102 ரன்களை 182.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் படைத்த சாதனையை முறியடித்தது.

வைபவ் சூரியவன்ஷியின் இத்தகைய சாதனைகள் இந்த இளம் வயதில் இந்திய டி20 மற்றும் ஒரு நாள் அணியில் விரைவில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்திருக்கிறது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in