இறுதிப் போட்டியை தன் வசமாக்கிய சூர்யவன்ஷி : குவியும் பாராட்டு!
இறுதி போட்டி
Vaibhav Suryavanshi scores century in U19 World Cup final 2026 : 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியானது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
சதம் விளாசிய சூர்யவன்ஷி
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய தொடக்கத்திலேயே அபாரமாக விளையாடியது பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வரும் இந்திய அணி 23 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்து அபாரமாக விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி சிக்ஸர்களாக விளாசினார். 55 பந்துகளில் சதம் விளாசி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சூர்யவன்ஷியின் எதிர்புறம்
வைபவ் சூர்யவன்ஷியுடன் எதிர்புறம் விளையாடிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே 51 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
80 பந்துகளில் 175 ரன்கள்
அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி வெறும் 80 பந்துகளில் அதிரடியாக 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடங்கும்.
ஆஸ்திரேலியா கேப்டன் பாராட்டு
14 வயது இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உலகக்கோப்பையில் 175 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்சின் பாராட்டைப் பெற்று அனைவரது கவனைத்தையும் ஈர்த்து வருகிறார்.
இளம் வயதில் டி20 சதம் அடித்த சூர்யவன்ஷி, உலக கிரிக்கெட்டில் மிரட்டும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
சாதனை
யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதமடித்த 3வது இந்திய வீரராகவும், 6வது உலக வீரராகவும் வரலாறு சாதனை படைத்துள்ளார் சூர்யவன்ஷி.
13 வயதில் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது, 14 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டது என இவரின் சாதனையை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
====

