
52 பந்துகளில் சதம் விளாசல் :
இங்கிலாந்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த சாதனை நிகழ்த்திப்பட்டது. 52 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசினார். இதன் மூலம் 53 பந்துகளில் சதம் விளாசிய பாகிஸ்தானின் கம்ரான் குலாம் சாதனையை அவர் முறியடித்தார்.
13 பவுண்டரிகளில், 10 சிக்ஸர்கள் :
இந்த ஆட்டத்தில் 78 பந்துகளில் 143 ரன்களை அவர் எடுத்தார். 13 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 183.33. இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்தது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் 48, 45 மற்றும் 86 ரன்களை மட்டுமே வைபவ் சூர்யவன்ஷி எடுத்து இருந்தார். கடந்த போட்டியில் 20 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
சாதனை மன்னன் சூர்யவன்ஷி :
ஜூன் மாதம் நடந்த ஐபிஎல் 18-வது சீசனில் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார் சூர்யவன்ஷி. அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அந்த சீசனில் விளையாடினார்.
கடந்த ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்டை போட்டியில் 56 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். இதன் மூலம், 2005ல் மொயின் அலி படைத்த சாதனையை அவர் சமன் செய்தார்.
இளையோர் ஒருநாள் கிரிக்கெட் - அதிவேக சதம் விளாசிய வீரர்கள்
ஷான் மார்ஷ் (ஆஸ்திரேலியா) - 70 பந்துகள் - 2001/02
ராஜ் அங்கத் பவா (இந்தியா) - 69 பந்துகள் - 2021/22
தமீம் இக்பால் (வங்கதேசம்) - 68 பந்துகள் - 2005/06
கம்ரான் குலாம் (பாகிஸ்தான்) - 53 பந்துகள் - 2013
வைபவ் சூர்யவன்ஷி (இந்தியா) - 52 பந்துகள் - 2025
====