இந்திய கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று சாதனை
சைப்ரஸ் நாட்டின் நிகோசியா நகரில் நடைபெற்ற 2026-ம் ஆண்டுக்கான சர்வதேச செஸ் கூட்டமைப்பின் மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
இதன் மூலம் மகளிர் கேண்டிடேட்ஸ் தொடரில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் வைசாலி பெற்றுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி
இந்த தொடர் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் வைசாலி உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். கடும் போட்டிக்கு நடுவே ஆட்டத்தை தன் வசப்படுத்தி வெற்றியை கண்டார் வைசாலி.
சவாலான உலக சாம்பியன்
இந்த தொடர் வெற்றியை தன்வச படுத்தியதன் மூலம் ,அவர் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனை எதிர்கொள்ள உள்ளார்.
உலக சாம்பியன் பட்டத்திற்கான இந்த சவால் இந்திய செஸ் விளையாட்டில் பெரும் எதிர்பார்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரின் வெற்றி
செஸ் உலகில் இந்தியாவின் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள வைஷாலியின் இந்தச் சாதனைக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மட்டுமல்லாது அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இவரது தம்பி பிரக்ஞானந்தா செஸ் உலகில் பல சாதனைகளைச் செய்து வரும் நிலையில், அக்காவான வைஷாலியும் உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்த இருவரின் வெற்றி உலகளவில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
===========