விஜய் ஹசாரே கிரிக்கெட் : 38 சிக்சர்கள், 574 ரன்கள் : பிகார் சாதனை

Bihar vs Arunachal Pradesh Vijay Hazare Trophy 2025 : விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிகார் அணி, 574 ரன்களை விளாசி உலக சாதனை படைத்து இருக்கிறது
Vijay Hazare Trophy 2025 Highlights Bihar team scores 574 runs in Vijay Hazare ODI, sets world record, beats Arunachal Pradesh
Vijay Hazare Trophy 2025 Highlights Bihar team scores 574 runs in Vijay Hazare ODI, sets world record, beats Arunachal PradeshGoogle
2 min read

ஒருநாள் போட்டியில் 574 ரன்கள்

Bihar vs Arunachal Pradesh Vijay Hazare Trophy 2025 Highlights : பிகார் - அருணாசல பிரேதச அணிகளுக்கு இடையே, விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. வைபவ் சூர்யவன்ஷி, சகிபுல் கனி, ஆயுஷ் லோஹருகா ஆகியோரி அட்டகாசமான சதங்கள் பிகார் அணியை உலக சாதனை படைக்க செய்தன.

வைபவ் சூர்யவன்ஷி

பிகார் அணி, 50 ஓவரில் 574 ரன்களை குவித்தது. பிகார் அணியின் துவக்க வீரர்களாக மங்கள் மஹ்ரோர், ரmன் மிஷின் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர்.

ரன் மிஷின் வைபவ் சூர்யவன்ஷி

ஒரு புறம் மங்கள் நிதானமாக ஆடி ரன் சேர்க்க மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி(Vaibhav Suryavanshi) புயலாய் களத்தில் சுழன்று அடித்தார். எதிரணியின் பந்துகளை துவம்சம் செய்து ரன் வேட்டையாடினார் வைபவ் சூர்யவன்ஷி. 84 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 15 சிக்சர், 16 பவுண்டரிகளுடன் 190 ரன்கள் விளாசினார்.

ஆயுஷ் லோஹருகா சதம்

பின்னர் வந்த பிகார் அணியின் பியுஷ் சிங் 66 பந்தில் 77 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஆயுஷ் லோஹருகா 56 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

32 பந்துகளில் சதம் - கேப்டன் சகிபுல் கனி

5ம் விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் சகிபுல் கனி வெறும் 32 பந்துகளில் சதமடித்தார். இது, ஏ பிரிவு கிரிக்கெட் போட்டிகளில் மிக அதிவிரைவு சதமாக அமைந்தது. மொத்தத்தில் 40 பந்துகளை எதிர்கொண்ட அவர், 12 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் குவித்து அருணாச்சல் அணியை கதிகலங்க செய்தார்.

அதிவேக சதம் - சகிபுல் கனி சாதனை

இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். உலக அளவில் ஜேக் பிரேசர் மற்றும் டிவில்லியர்ஸ்க்கு பிறகு அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை சகிபுல் கனி பெற்றிருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் புதிய சாதனை

50 ஓவர் முடிவில் பிகார் அணி, 6 விக்கெட் இழந்து 574 ரன் குவித்து, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்தது. இதற்கு முன், ஏ பிரிவு போட்டிகளில் தமிழ்நாடு, 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

அருணாச்சல் அணி தோல்வி

பிகார் அணி வீரர்கள் மொத்தத்தில் 38 சிக்சர்கள், 49 பவுண்டரிகள் விளாசி அரங்கத்தை அதிரச் செய்தனர். இதையடுத்து, 575 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆடிய அருணாசலப்பிரேதசம் அணி 42.1 ஓவரில் 177 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

பிகார் அணி வரலாற்று வெற்றி

அதனால், 391 ரன் வித்தியாசத்தில் பீகார் அணி, வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பதிவு செய்தது. மூன்று அதிவேக சதங்கள் அந்த அணி, இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்தது.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in