
ஒருநாள் போட்டி
Spinners bowl 92 overs as West Indies beats Bangladesh : மிர்பூர் நகரில் வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
ஆதிக்கம் செலுத்திய ஸ்பின்
இந்த ஒருநாள் போட்டியின் வரலாற்று சிறப்பு என்ன என்றால், மொத்தம் 100 ஓவர்களில் இரு அணிகளும் 92 ஓவர்கள் ஸ்பின் பந்து வீச்சின் மூலம் விளையாடிது தான். இதுவரை எந்த ஒருநாள் போட்டியிலும் இந்த அளவு ஸ்பின் ஆதிக்கம் செலுத்தியதே கிடையாது.
ஸ்பின்-ல் கலக்கிய வெஸ்ட் இண்டீஸ்
கூடுதல் சிறப்பு என்னவெனில், வெஸ்ட் இண்டீஸ் அணி என்றாலே வேகப்பந்து வீச்சு தான். ஒரு காலத்தில் அந்த அணி பவுலர்களின் வேகம், பேட்டிங் செய்யும் வீரர்களை மிரள வைக்கும். ஆனால், இந்த ஆட்டத்தில் தனது 50 ஓவர்களையும் ஸ்பின் பவுலிங்கை வைத்தே வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைத்து, கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தது.
டை போட்டியில் வங்கதேசம்
இந்த ஆட்டத்தில் வங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர். அவர் 8 ஓவர்களை வீசினார். இந்தப் போட்டியில் மற்றொரு வரலாற்று சிறப்பு என்னவென்றால், வங்கதேசம் பல்வேறு வடிவங்களில் விளையாடி இருக்கும் 813 போட்டிகளில் முதல் முறையாக ஒரு போட்டி டை என முடிந்து தான்.
எனவே, சூப்பர் ஓவர் கொடுக்கப்பட அதில் வங்கதேசம் வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. அதை எடுத்த அந்த அணி தவற, வெற்றிக்கனியை வசப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ்.
===============