’லாரா’தான் ஜாம்பவான் : சாதிக்காமல் டிக்ளேர் செய்த வியான் முல்டர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைக்க வாய்ப்பு இருந்தும் லாராவின் சாதனையை முறியடிக்காமல், ஆட்டத்தை டிக்ளேர் செய்தார் வியான் முல்டர்.
Wiaan Mulder not break Brian Lara's 400 runs
Wiaan Mulder not break Brian Lara's 400 runs
2 min read

வியான் முல்டர் முச்சதம் :

ஜிம்பாப்வே - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வியான் முல்டர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.

முதல்நாள் ஆட்டத்தில் வியான் முல்​டர் 259 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 34 பவுண்​டரி​களு​டன் 264 ரன்​கள் எடுத்து இருந்தார். 2ம் நாள் ஆட்டத்தில் அவர், முச்​சதம் அடித்​தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்​கெட்​டில் விரை​வாக முச்​சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்​தார்.

டெஸ்ட்டில் முச்சதம் அடித்த சாதனையாளர்கள் :

இந்​தி​யா​வின் வீரேந்​திர சேவக் 2008ம் ஆண்டு தென்னாப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான டெஸ்​டில் 278 பந்​துகளில் முச்​சதம் அடித்து சாதனை படைத்து முதலிடத்​தில் உள்​ளார். டெஸ்ட் கிரிக்​கெட்​டில் முச்​சதம் அடித்த 2வது தென்னாப்​பிரிக்க வீரர் என்ற பெரு​மை​யை​யும் பெற்​றார் வியான் முல்​டர். இதற்கு முன்​னர் ஹசிம் ஆம்லா முச்​சதம் அடித்​திக்கிறார்.

ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா :

தென்னாப்​பிரிக்க அணி 114 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 626 ரன்​கள் குவித்த நிலை​யில், முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது. வியான் முல்​டர் 334 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 49 பவுண்​டரி​களு​டன் 367 ரன்​களை எடுத்து இருந்தார்.

367 ரன்​கள் விளாசி​யதன் மூலம் டெஸ்ட் அரங்​கில் தென் ஆப்​பிரிக்க அணிக்​காக அதிக ரன்​கள் விளாசிய வீரர் என்ற சாதனையை​ வியான் முல்​டர் நிகழ்த்​தி​னார்.

பிரையன் லாராவின் சாதனை :

சர்​வ​தேச டெஸ்ட் கிரிக்​கெட்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் பிரையன் லாரா விளாசிய 400 ரன்​களே இது​வரை ஓர் இன்​னிங்​ஸில் விளாசப்​பட்ட அதி​கபட்ச ரன்​களாக இருந்து வரு​கிறது. இந்த சாதனையை முறியடிக்க வியான் முல்​டருக்கு 34 ரன்​களே தேவை​யாக இருந்​தன.

சாதனையை தாண்டாத வியான் முல்டர் :

ஆனால் அவர், சாதனையை கருத்​தில் கொள்​ளாமல் டிக்​ளேர் முடிவை அறி​வித்து அனை​வரை​யும் ஆச்​சரி​யப்​படுத்​தி​னார். அந்த வகையில், ஓர் இன்​னிங்​ஸில் அதிக ரன்​கள் குவித்த பேட்​ஸ்​மேன்​களின் பட்​டியலில் வியான் முல்​டர் 5வது இடத்தை பிடித்​துள்​ளார்.

சாதனையாளர்களாக நிற்கும் பேட்ஸ்மேன்கள் :

400 ரன்களுடன் பிரையன் லாரா, 380 ரன்களுடன் மேத்யூ ஹைடன், 375 ரன்களுடன் பிரையன் லாரா, 374 ரன்களுடன் ஜெய​வர்த்​தனே முதல் 4 இடங்​களில் உள்​ளனர்​. உலக சாதனை படைக்க வாய்ப்பு இருந்தும், டிக்ளேர் செய்தது பற்றி வியான் முல்​டர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

லாராதான் ஜாம்பவான் :

“ஆட்டத்தில் நாங்கள் போதுமான ரன்கள் எடுத்திருந்தோம். நாங்கள் பந்து வீச வேண்டும் என நினைத்தேன். பிரையன் லாரா ஜாம்பவான். அந்த சாதனையை தன்வசம் வைத்துக்கொள்ள அவர் தகுதியானவர். மற்றொரு முறை எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தாலும் நிச்சயம் லாராவின் ஸ்கோரை மிஞ்ச மாட்டேன். மீண்டும் இதையேதான் செய்வேன்” என வியான் முல்டர் தெரிவித்தார்.

400-ஐ தொடவே மாட்டேன் :

கிரிக்கெட் ஜாம்பவானான பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வியான் முல்டரின் இந்தச் செயல், உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in