

உலகக் கோப்பை கால்பந்து
World Cup football tournament kicks off tomorrow, record prize money ₹6,238 crore awarded to the teams : உலகக் கோப்பை கால்பந்து (FIFA World Cup) என்பது உலகெங்கிலும் உள்ள தேசிய ஆண்கள் அணிகள் பங்கேற்கும் மிகவும் பிரபலமான கால்பந்து போட்டியாகும்.
நாளை தொடங்கும் கால்பந்து தொடர்
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) மூலம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறுகிறது.
48 அணிகள் களம் காண்கின்றன
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக நடத்துகின்றன.
இந்த முறை முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன.
104 போட்டிகள்
மொத்தம் 104 போட்டிகள் 16 நகரங்களில் நடைபெறுகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து வரலாறு
* 1930 ஆம் ஆண்டு உருகுவே நாட்டில் தொடங்கப்பட்டது இந்தத் தொடர்.
* பிரேசில் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடத்தில் உள்ளது.
* 2022ல் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது.
கால்பந்து திருவிழா
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண, கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கிடக்கிறார்கள்.
மிக அதிக அளவு பரிசுத்தொகை
இந்த முறை கால்பந்து வரலாற்றிலேயே முதல் முறையாக 48 அணிகள் களமிறங்குகின்றன. அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போட்டிகளும், பரிசுத்தொகையும் உயர்ந்துள்ளது.
ரூ.6,238 கோடி பரிசு
FIFA வழங்கும் பரிசுத்தொகை மட்டும் ரூ.6,238.42 கோடி ஆகும்.
உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் மற்ற செலவுகளையும் சேர்த்தால், மொத்த மதிப்பு ரூ.7,400 கோடியைத் தாண்டும்.
வெல்லும் அணிக்கு ரூ.417 கோடி பரிசு
இந்த முறை உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.417.50 கோடி பரிசுத்தொகையாகக் கிடைக்கும். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவுக்கு கிடைத்ததை விட 76 கோடி அதிகம்.
இதுபோக, உலகக்கோப்பைக்குத் தயாராவதற்கான செலவுத் தொகையும் தனியாக வழங்கப்படும்.
கோடிக்கணக்கில் பரிசு
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு சுமார் ரூ.288 கோடியும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.254.675 கோடியும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.237 கோடியும் கிடைக்கும்.
எல்லா அணிகளுக்கும் பரிசு
போட்டிகளில் கலந்து கொள்ளும் 48 அணிகளுக்கும் பரிசுத்தொகை நிச்சயம் உண்டு, வெற்றி பெறும் போட்டிகளை பொருத்து, இது மாறுபடும்.
காலிறுதிக்கு வரும் அணிகளுக்கு கை நிறைய பரிசு காத்திருக்கிறது. குறைந்தபட்சம், உலகக்கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ரூ.87.5 கோடி உறுதியாகக் கிடைக்கும்.
தனியாக செலவுத்தொகை
அதுமட்டுமின்றி அணிகள் தயாராவதற்கான செலவுத்தொகை தனியாக வழங்கப்படும்.
வரலாறு காணாத பரிசுத்தொகை
போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மூன்று நாடுகளில் இருந்து கிடைக்கும் விளம்பரத்தொகை காரணமாக FIFA-வின் வருமானம் பெருமளவில் உயர்ந்து இருப்பதால், பரிசுத்தொகையும் வரலாறு காணாத அளவு உயர்த்தி வழங்கப்படுகிறது.
======================