FIFA : ”ஸ்பெயினுக்கு தண்ணி காட்டிய குட்டி நாடு கேப் வெர்டே” : 7 கோல்களை தடுத்த கோல்கீப்பர் வோசின்ஹா : ஆட்டம் டிரா..!

உலகக்கோப்பை கால்பந்தில் குட்டி நாடான கேப் வெர்டே ஸ்பெயினுக்கு தண்ணி காட்டி 7 கோல்கள் போடாமல் தடுத்து, ஆட்டத்தை டிரா செய்தது.
World Cup football tournament,tiny nation of Cape Verde held Spain to a draw, successfully preventing  scoring any goals
World Cup football tournament,tiny nation of Cape Verde held Spain to a draw, successfully preventing scoring any goalsgoogle
1 min read

ஸ்பெயின் vs கேப் வெர்டே

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்காவின் ஜியார்ஜியா, அட்லாண்டா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் கொண்ட ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணியை, 50 லட்சம் மக்கள் தொகையே கொண்ட ஆப்பிரிக்காவின் சிறிய கேப் வெர்டே எதிர்கொண்டது.

ஸ்பெயின் கனவு தகர்ந்தது

முதன்முதலாக உலகக்கோப்பை தொடரில் அறிமுகமாகி இருக்கும் கேப் வெர்டே சுண்டைக்காய் அணி என்று நினைத்த ஸ்பெயினின் கனவு மைதானத்தில் தவிடுபொடியானது.

கேப் வெர்டே அணியின் 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹா அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சரியாக சொல்வது என்றால், அணிக்கு சீனப் பெருஞ்சுவர் போல நின்றார் அவர்.

ஸ்பெயின் முயற்சிகள் வீணானது

நேற்றைய போட்டியின் ஹீரோ என்றால் வோசின்ஹா தான். இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணியின் 27 கோல் முயற்சியில், இலக்கை நோக்கிய ஷாட்கள் ஒன்று கூட வலைக்குள் செல்ல முடியாமல் மதில் சுவாராய் நின்று காத்தார் வோசின்ஹா.

கோல்கள் அடிக்க வாய்ப்பே இல்லை

குறிப்பாக 7 கோல்கள் அடிக்க 100 சதவீதம் வாய்ப்பு இருந்தும், வோசின்ஹா சிறப்பான முறையில் தடுத்து, ஸ்பெயினின் கனவை தகர்த்து எறிந்தார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களை கொண்டுள்ள ஸ்பெயின் அணி, கேப் வெர்டாவின் தடுப்பு ஆட்டத்தை பார்த்து வெலவெலத்து போனது.

ஆட்டத்தின் இறுதி விசில் அடிக்கப்பட்டவுடன் சாம்பியன் ஸ்பெயின் அணியுடன் 0-0 என்று டிரா என்ற ஸ்கோரைப் பார்த்து வோசின்ஹா உணர்ச்சி வயப்பட்டு கண்ணீர் விட்டார்.

தப்பிப் பிழைத்த ஸ்பெயின்

இந்த ஆட்டத்தில் கேப் வெர்டே அணிக்கு ஒரு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நல்லவேளை ஸ்பெயின் கோல் கீப்பர் உனய் சிமோன், அதை தடுத்து விட்டதால், ஆட்டம் டிரா ஆனது.

இல்லையெனில் ஸ்பெயின் தோற்று, உலகக்கோப்பை தொடரின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கும்.

ஆட்ட நாயகன் வோசின்ஹா

வெள்ளை நிற ஜெர்சியில் களமிறங்கிய கேப் வெர்டே வீரர்கள், தங்கள் கோல் பகுதியைச் சுற்றி உறுதியான பாதுகாப்பு அரணை அமைத்து ஸ்பெயினின் தொடர்ச்சியான தாக்குதல்களை முறியடித்தனர். போட்டி முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வோசின்ஹா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in