சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் : களமிறங்கும் முன்னணி வீரர்கள்

Chennai Grand Masters 2025 Players List : சென்னையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
Chennai Grand Masters 2025 Players List
Chennai Grand Masters 2025 Players Listhttps://x.com/Chennai_GM
1 min read

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி :

Chennai Grand Masters 2025 Players List : இந்தியாவின் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியின் 3வது சீசன் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் நடைபெறுகிறது. நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்தப் போட்டிகளில், பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பரிசுத் தொகையும் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

களமிறங்கும் முன்னணி வீரர்கள் :

மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபாரெஸ்ட் ஆகியோர் விளையாட உள்ளனர்.

அமெரிக்காவின் லியாங் அவோன்டர், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் ரே ராப்சன், ரஷ்யாவின் விளாடிமிர் ஃபெடோசீவ் மற்றும் 2024-ல் சேலஞ்சர்ஸ் பிரிவில் வென்ற இந்தியாவின் வி.பிரணவ் ஆகியோர் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கின்றனர்.

இணைய தளத்தில் டிக்கெட் விற்பனை :

செஸ் போட்டிகளை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் பெறலாம். டிக்கெட்டின் ஆரம்ப விலை 750 ரூபாய்(Chennai Grand Masters 2025 Ticket Price). விஐபி டிக்கெட் விலை ரூ.3,500. சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்தியாவின் கார்த்திகேயன் முரளி, லியோன் மென்டோன்சா, ஆர்.வைஷாலி, ஹரிகா துரோணவள்ளி ஆகியோர் களம் காண்கின்றனர்.

அபிமன்யு புராணிக், ஆர்யன் சோப்ரா, அதிபன் பாஸ்கரன், பி.இனியன், தீப்தயன் கோஷ் மற்றும் எம்.பிரனேஷ் ஆகியோர் சேலஞ்சர்ஸ் பிரிவில் விளையாடுகின்றனர்.

வெற்றியாளர்களுக்கு லட்சங்களில் பரிசு :

மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.25 லட்சமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெறுவோருக்கு ரூ.15 லட்சமும், ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும். சேலஞ்சர்ஸ் வெற்றியாளருக்கு ரூ.7 லட்சமும், 2026ம் ஆண்டு மாஸ்டர்ஸ் போட்டியில் விளையாடுவதற்கான இடமும் வழங்கப்படும்.

மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவர் 24.5 ஃபிடே சர்க்யூட் புள்ளிகளை பெறுவார். இந்த புள்ளிகள் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமாக பயன்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு முறையே 17.8 மற்றும் 15.6 புள்ளிகள் கிடைக்கும்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in