பக்தர்களுக்கு குட் நியூஸ் : திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா : சிறப்பு ரயில்கள் இயக்கம்...!

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Southern Railway  announced special trains will be operated for Soorasamharam at Tiruchendur
Southern Railway announced special trains will be operated for Soorasamharam at Tiruchendur source:thamizhalai,ai generated
1 min read

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

வெளிநாட்டு பக்தர்களும் பங்கேற்பு

இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

விரதம் இருக்கும் முருக பக்தர்கள்

குறிப்பாக பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி ஆறு நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.

15ம் தேதி சூரசம்ஹாரம்

இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 10ம் தேதி காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நடைபெற உள்ளது.

முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக நெல்லை திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

முதல் சிறப்பு ரயில் (06001) வரும் 15ம் தேதி மாலை 3.20 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் (06002) திருச்செந்தூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 8.50 மணிக்கு நெல்லை சந்திப்பு வந்தடையும். இந்த ரயிலில் 8 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

இரவு நேர வசதிக்காக மற்றொரு சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் எண் 06004 இரவு 10.45 மணிக்கு நெல்லை சந்திப்பு வந்தடையும்.

இதேபோல் நெல்லையில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் எண் 06003 மறுநாள் அதிகாலை 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். இந்த ரயிலில் 10 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த சிறப்பு ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதன் மூலம் நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சூரசம்ஹார விழாவைக் காண செல்லும் பக்தர்கள் எளிதாக திருச்செந்தூர் சென்று திரும்ப முடியும்.

பக்தர்கள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=====