பாஜக பக்கம் சாயும் 17 எம்பிக்கள்! : மாறப்போகும் மக்களவை சமன்பாடு, உயரும் பலம்..!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 மக்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணையலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
17 mp,s from EX-TMC and current NCPI party where expected to join on bjp soon and it makes  bengal political landscape
17 mp,s from EX-TMC and current NCPI party where expected to join on bjp soon and it makes bengal political landscape Ai Generated
1 min read

மேற்குவங்க அரசியலில் பரபரப்பு :

திரிணமூல் கட்சியை சேர்ந்த MP- 20 பேர் சில நாட்களுக்கு முன்பாக அந்த கட்சியிலிருந்து விலகி வேறொரு கட்சியான NCPI என்ற கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர் .

எனவே அவர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் அவர்கள் தற்பொழுது பாஜகவை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளன .

சில நாட்களுக்கு முன்பே அவர்கள் இணைவார்கள் என எதிர்பார்ப்பு :

இந்நிலையில் துர்கா பூஜை பண்டிகைக்கு முன்போ அல்லது பின்போ NCPI கட்சியின் 17 மக்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைவார்கள் என கூச் பெஹார் மக்களவை உறுப்பினருமான ஜகதீஷ் சந்திர பர்மா பசுனியா தெரிவித்துள்ளார்.

பர்மா பசுனியா மம்தா பானர்ஜிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த 20 மக்களவை உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.

இந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் ?

இந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்குவங்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர் இவர்கள்

சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தோல்விபெற்ற பிறகு ஏற்கனவே அதிருப்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இந்த உறுப்பினர்கள் திடீரென அக்கட்சியிலிருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர் .

அதுமட்டுமல்லாமல் இவர்கள் மீது கட்சி தடைதாவால் சட்டம் பாயாது என தகவல்கள் வெளியாகின்றன .

வெளியிலிருந்து மூன்று எம்.பி.,க்கள் ஆதரவு :

இந்த பேர் உடன் மூன்று தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்தனர் அதில் மிக முக்கியமாக முன்னாள் இந்தியா கிரிக்கெட் அணி வீரர் யூசுப் பதானும் ஒருவர் ஆவார்

இவருடன் இனைந்து அபு தாஹர் கான், கலீலுர் ரஹ்மான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதாக கூறியுள்ளனர் .

உச்சநீதிமன்றத்தை நாடிய திரிணமூல் காங்கிரஸ் :

இந்த 20 எம்.பி.,க்களும் கட்சி தாவியதை அடுத்து இவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிம்னன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வழக்கு ஒன்றை தொடுத்திருந்தது அதன் அடிப்படையில் இவர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது .

பாஜகவின் எண்ணிக்கை உயர வாய்ப்பு :

ஏற்கனவே பாஜகவிற்கு 240 எம்.பி.,க்கள் உள்ள நிலையில் இவர்களில் 17 பேர் அங்கு சென்று சேர்ந்தால் பாஜகவின் பலம் நாடாளுமன்றத்தில் 257 ஆகா உயரும் அது அவர்களுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என கருதலாம் .

logo
Thamizh Alai
www.thamizhalai.in