"Cease Fire" to "Pookie" வரை : 2025ல் இந்தியர்கள் அதிகம் தேடியவை

2025 Most Searched Word in Google in India : 2025ல் இந்தியர்கள் Pookie, Ceasefire, Stampede, Mayday போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அதிக அளவில் தேடி இருக்கிறார்கள்.
2025, Indians are  searching for the meaning of words like Pookie, Ceasefire, Stampede, and Mayday
2025, Indians are searching for the meaning of words like Pookie, Ceasefire, Stampede, and MaydayIndia's Year in Search 2025: The A to Z
2 min read

Year in Search’

2025 Most Searched Word in Google in India : ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய தேடல் தரவுகளின் அடிப்படையில் கூகுள் வெளியிடும் ‘Year in Search’ அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இது கூட்டு ஆர்வம், அன்றாடச் சிந்தனைகளை படம் பிடித்துக் காட்டுகிறது. அதன்படி, 2025ம் ஆண்டுக்கான இந்திய தேடல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், எந்த வார்த்தைகளுக்கான 'அர்த்தம்' (Meaning) குறித்து இந்தியர்கள் அதிகமாக தேடினார்கள் என்பதே சுவாரஸ்யமாக இருக்கிறது.

சர்வதேச அரசியல் பதற்றம், உள்நாட்டு விபத்துகள் மற்றும் வைரல் இணையப் பண்பாடு உள்ளிட்டவை தேடல் பட்டியலில், அதிகம் இடம்பெற்று இருக்கின்றன.

முதல் இடத்தில் "Ceasefire"

இந்த ஆண்டில் கூகுள் தேடல் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்து இருக்கும் சொல், “Ceasefire”. சர்வதேசப் போர்ச் சூழல்கள் மற்றும் எல்லை பதட்டங்கள் போன்ற செய்திகள் இந்த ஆண்டு முக்கியத்துவம் பெற்றன.

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நிலைப்பாடு மற்றும் பாலஸ்தீனம் - இஸ்ரேல் மோதல்கள் தொடர்பான செய்திகள் மக்களைச் சென்றடைந்தன எனவே, 'சண்டை நிறுத்தம்' என்ற வார்த்தையின் அதிகாரப்பூர்வ அர்த்தத்தையும், அதன் பின்னால் உள்ள அரசியல் நுணுக்கங்களையும் அறிந்து கொள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் கூகுளை நாடினர்.

அது மட்டுமின்றி மக்களின் பாதுகாப்புக் கவலைகளை வெளிப்படுத்தும் சில வார்த்தைகளின் அர்த்தங்களும் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தின.

Mock Drill : அவசர நிலை ஒத்திகைகள் நாடு முழுவதும் நடந்தபோது, இந்தச் சொல்லின் பொருள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் தேடினர்.

Stampede : இந்த ஆண்டு நிகழ்ந்த சில விபத்துகள் கூட்ட நெரிசலால் ஏற்பட்டன. எனவே, கூட்ட நெரிசல் குறித்த செய்திகளின் பின்னணியில் அதன் அர்த்தத்தை மக்கள் தேடினர். மகா கும்ப மேளா கூட்ட நெரிசல் போன்ற பெரிய நிகழ்வுகளின் போது இந்தத் தேடல் அதிகமாக இருந்தது.

Mayday : விமானப் பயணத்திலும் கடல்சார் தொடர்பிலும் அவசர நிலையை தெரிவிக்க பயன்படுத்தப்படும் முக்கிய ‘அவசரச் சொல்’ இது. உயிர் அபாயம் ஏற்பட்டபோது உடனடியாக உதவி வேண்டி கேட்கப் பயன்படுத்தப்படும் இந்த சொல்லின் அர்த்தத்தையும் பயன்பாட்டையும் பலரும் தேடியுள்ளனர். இதற்கு காரணம் ஏர் இந்தியா விமான விபத்து, குஜராத்தில் நிகழ்ந்த இந்த விபத்தின் போது, விமானத்தை இயக்கிய பைலட் ஒருவர் “Mayday” அழைப்பை பதிவு செய்திருந்தார்.

Gen-Z - 2K கிட்ஸ் அதிகம் தேடிய அர்த்தங்கள்

சமூக வலைதளங்கள் மற்றும் இளைஞர் கலாச்சாரம் சார்ந்த புதிய வார்த்தைகளின் அர்த்தங்களும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இது, இணையப் பண்பாடு எந்த அளவுக்குப் பொது மொழியில் கலக்கிறது என்பதைக் காட்டுகிறது.

Pookie : அன்புக்குரிய ஒருவரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் இந்த 'அன்புச் சொல்'. இது Content Creator மூலமாக வைரலானது. இதன் அர்த்தம் மற்றும் பயன்பாடு குறித்து பலரும் தேடியுள்ளனர்.

5201314 : இது ஒரு சீன எண் குறியீடு. இது, "நான் உன்னை ஒரு வாழ்நாள் முழுவதும் காதலிக்கிறேன்" (I love you for a lifetime) என்ற சீன இணையச் சுருக்கெழுத்தைக் குறிக்கிறது. மே 20 அன்று சீனாவில் கொண்டாடப்படும் காதலர் தினத்தின்போது தேடல் உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்தது.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in