

முதல் மந்திரிகள் மாநாடு :
இந்தியாவின் தென் மாநிலங்கள் பங்கேற்கும் தென் மண்டல முதல் மந்திரிகள் மாநாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம்19மற்றும் 20 தேதிகளில் சென்னையில் உள்ள கோவலத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது .
இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் ஜோசப்விஜய் ,கேரள முதல்வர் சதீசன் கர்நாடக முதல்வர் டிகே .சிவகுமார் ,மற்றும் அந்திரபிரதேஷ முதல்வர் சந்திரா பாபு நாயுடு ,தெலுங்கானா முதல்வர் ரேவந் ரெட்டி, யூனியன் பிரதேஷமான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது .
முக்கிய உயர்மட்ட அதிகாரிகளும் பங்கேற்பு :
இந்த மாநாட்டில் முதல்வர்கள் மட்டுமல்லாமல் அந்தந்த மாநில உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் போன்ற பல்வேறு அரசுத்துறை நபர்கள் பங்கேற்கிறார்கள் என தகவல் வெளியாகிறுகின்றன.
இதனை அடுத்து வருகின்ற 18ஆம் தேதி அனைத்து அரசு துறை செயலாளர்கள் கூடமானது நடைபெறுகிறது .
மாநாட்டில் விவாதிக்கக்கூடிய முக்கியமான அம்சங்கள் :
மாநாட்டில் மாநிலங்களின் எல்லைப்புறங்களில் நிலவும் பிரச்சினைகள், கடத்தல் குற்றங்கள், மாநிலம் விட்டு மாநிலம் தப்பிச் சென்று பதுங்கும் குற்றவாளிகள் தொடர்பான தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சார்ந்த அம்சங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன.
மேலும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் தகவல் பகிர்வு முறைகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இதனுடன், மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பகிர்வு, பிராந்திய உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து இணைப்பு, எல்லைப் பகுதிகளில் ஏற்படும் பதற்ற நிலைகளை தணிக்கும் நடவடிக்கைகள் ஆகியவையும் விவாதப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தமிழக கர்நாடக முதல் மந்திரிகள் சந்திப்பு :
இதில் மிக முக்கியமாக தமிழக முதல்வரான விஜய் மற்றும் கர்நாடக முதல்வரான டிகே.சிவகுமார் இருவரும் காவிரி விவாகர பிரச்னைக்கு அடுத்த படியாக முதல்முறை சந்திக்க உள்ளனர் என்பதும் குறிப்புடத்தக்கது.
அதேபோல இந்த கூட்டத்தில் இவர்கள் இரு மாநிலங்களுக்கும் உண்டான காவிரி பிரச்சனை தொடர்பாக விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .