புதிய முப்படை தளபதி பதவியேற்பு
முப்படை தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து நாட்டின் 3-வது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி பதவியேற்றுக்கொண்டார்
யார் இந்த ராஜா சுப்பிரமணி ?
இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து கடந்த 1985-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார்.
பல பிரிவுகளில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர். ராணுவத் துணை தளபதியாக பணியாற்றிய இவர் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் முப்படை தளபதியாக பதிவியேற்றுக்கொண்டுள்ளார்
ராணுவ ஆலோசகராகவும் பணிபுரிந்தவர்
புதிதாக பதவியேற்றுள்ள தலமை முப்படை தளபதி ,பாகிஸ்தான் மற்றும் சீனா நிலவரங்களை இவர் நன்கு அறிந்தமையால் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைமை செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
கடற்படை தளபதியாக அட்மிரல் கிருஷ்ண சுவாமி நாதன் பொறுப்பேற்பு
இந்திய கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி ஓய்வு பெற்றதையடுத்து, நாட்டின் 27-வது கடற்படை தளபதியாக அட்மிரல் கிருஷ்ண சுவாமி நாதனும் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்
இவரின் பின்ணணி
புதிதாக பொறுப்பேற்றுள்ள கடற்படை தளபதி ,கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு சேர்ந்தார்.குறிப்பாக இவர் கடற்படையில் சிறந்த பணிக்காக பரம் விசிஷ்ட் சேவா, அதி விசிஷ்ட் சேவா மற்றும் விசிஷ்ட் சேவா பதக்கங்களை இவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது