மோடியின் பயண விவரிப்பு : பியுஸ்கோயல் விளக்கம்
ரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட ஐந்து நாடுகள் பயணத்தின்போது 57 முக்கிய முடிவுகள் எட்டப்பட்டதாகவும், இவை இந்தியாவின் எதிர்காலத்துக்கு பெரும் பயன்களைத் தரக்கூடியவை என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கவனத்தை ஈர்த்த பிரதமரின் பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டார்.
பிரதமரின் இந்த ஐந்து நாடுகளை உள்ளடக்கிய பயணத்தின்போது, இந்தியா அனைவரின் கவன மையமாக திகழ்ந்தது என்றும் மத்திய அமைச்சரும் விவரித்திருந்தார்
மூன்று சர்வதேச கவுரவங்களை பெற்ற பிரதமர்
பிரதமர் மோடிக்கு ஐந்து நாடுகளிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் அவரை பெருமைப்படுத்தினர். இந்தியாவும், பிரதமர் மோடியும் மூன்று சர்வதேச கவுரவங்களைப் பெற்றுள்ளது குறிபிடதக்கது
இது குறித்து மத்திய அமைச்சர் கூறியதாவது
ஐந்து நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து நாடுகள் பயணத்தின் மூலம், இன்றைய நிலையில் இந்தியா உலக அரங்கில் உறுதியாக நிலைத்து நிற்கிறது என்ற தெளிவான செய்தி உலக்கு உணர்த்தப்பட்டுள்ளது. உலகம் மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் இந்தியாவை நோக்குகிறது.
பிரதமர் மோடியின் தலைமையை இந்திய மக்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுள்ளனர். இன்று, ஒட்டுமொத்த உலகமும் அவரது தலைமைத்துவத்தை மரியாதை, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுடன் உற்று நோக்குகிறது என்றும்
மோடியின் பயணம் : 57 முக்கிய முடிவுகளுக்கு வழி வகுத்துள்ளது
து வெறும் சர்வதேச ராஜதந்திர, அரசியல் பயணம் மட்டுமல்ல. இது இந்தியாவின் எதிர்காலத்துக்குப் பெரும் பயன்களை ஈட்டித் தந்துள்ளது. இந்த பயணத்தின் மூலம் எட்டப்பட்ட 57 முக்கிய முடிவுகள்,
வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி, உத்திகள், பொருளாதாரப் பயணம், திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், தற்சார்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றை வடிவமைக்க இருக்கின்றன.
ஐந்து நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஐந்து நாள் பயணம் நமது ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளை உருவாக்கவும், இந்தியாவில் பெருமளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் ஒரு உந்து சக்தியாக அமையும். ஐரோப்பாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று துணையாக நின்று பயனடையும் நட்பு நாடுகளைப் போன்றவை.
நமக்கு இடையே போட்டி குறைவு. கூட்டாண்மைதான் அதிகம். இந்த நாடுகள் இந்தியாவை ஒரு நிலையான, நம்பகமான சக்தியாகவே நோக்குகின்றன” என தெரிவித்துள்ளார்.
====================