

இரும்பு பெண்மணி மம்தா
மேற்கு வங்க முதல்வராக மூன்று முறை கோலோச்சியவர் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. அவரது இரும்பு கோட்டையை யாரும் அசைக்க முடியாத என்ற தம்பிக்கையை பாஜக தகர்த்தது.
இதற்கு முன்பு மம்தா எதிர்த்த இடதுசாரிகளும், காங்கிரசும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, ஓரிரு இடங்களில் வெற்றி என்பதே கேள்விக்குறியாகி நிற்கிறது.
சட்டமன்ற தேர்தல் என்றாலும், மக்களவை தேர்தல் என்றாலும், மேற்கு வங்கத்தில் மம்தாவின் கொடி தான் பறக்கும். எனவே, தேசிய அரசியலிலும் அவருக்கு முக்கியத்துவம் அதிகம்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி
கடந்த சட்டமன்ற தேர்தலில் 70க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்த பாஜக இந்தமுறை ஆட்சியை பிடித்து விட்டது. பாஜக வரலாற்றில் இது முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சியான திரிணாமூல்
திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த சூழலில் திரிணமூல் எம்பிக்கள் அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.
எம்எல்ஏக்கள் கூட்டம் 60 பேர் பாய்காட்
கொல்கத்தாவில் உள்ள மம்தாவின் வீட்டில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மொத்தமுள்ள 80 திரிணமூல் எம்எல்ஏக்களில் 60 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டம் ஒத்திவைப்பு
மம்தா உட்பட 20 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மம்தா தெரிவித்தார்.
தேர்தலுக்கு பிறகு நடந்த வன்முறைகளை கண்டித்து திரிணாமூல் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும், மொத்தம் உள்ள 80 எம்எல்ஏக்களில் 35 பேர் கலந்து கொண்டனர்.
திரிணாமூல் காங்கிரசில் விரக்தி
தேர்தல் தோல்விக்கு பிறகு திரிணாமூல் காங்கிரசில் விரக்தி தலைதூக்கி வருகிறது. முக்கிய தலைவர்கள் பாஜகவிற்கு தாவி வருகிறார்கள். சிலர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
பாஜகவின் புதிய முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் எம்எல்ஏக்கள் பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து இருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
மம்தாவுக்கு பெரும் பின்னடைவு
இந்தச்சூழலில் மம்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்திருப்பது திரிணமூல் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
திரிணமூல் காங்கிரசுக்கு 28 மக்களவை எம்பிக்கள், 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். இதில் 20 எம்பிக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள். எந்த நேரமும் அவர்கள் கட்சி தாவலாம், அல்லது தனி அணியாக செயல்படலாம்.
திரிணாமுல் காங்கிரசை கரைக்கும் பாஜக
பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வரும் மம்தாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது கட்சியை பாஜக மெல்ல மெல்ல கரைத்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனிடையே போலி கையெழுத்து விவகாரத்தில் இரண்டு எம்எல்ஏக்கள கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார் மம்தா.
====================