மகளிர் உரிமைத்தொகை திட்டம் : 92 லட்சம் பயனாளர்கள் நீக்கம், e-KYC முறையை பின்பற்றவிலை : மகா​ராஷ்டிரா அரசு நடவடிக்கை!

2.4 கோடி பெண்கள் உரிமைதொகையை பெற்றும் வரும் நிலையில், அவர்களின் வங்கிக் கணக்குகளை 'இ-கேஒய்சி' சரிபார்ப்பு செய்ய மாநில அரசு அறிவுறுத்தியிருந்தது அதை தவறிய பயனாளர்களை மகாராஷ்டிர அரசு நீக்கியுள்ளது
9.2 million female beneficiaries removed for failing to follow the e-KYC procedure; Maharashtra government takes action
9.2 million female beneficiaries removed for failing to follow the e-KYC procedure; Maharashtra government takes actiongoogle
1 min read

மகா​ராஷ்டிரா அரசின் மகளிர் உரிமை தொகை

மகா​ராஷ்டிரா அரசால் ‘மாஜி லட்கி பஹின் யோஜ​னா’ என்ற திட்​டம் மூலம் மகளிருக்கு மாதம் ரூ 1500 மகளிர் உரிமை தொகையாக தகுதியுள்ள நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கி வருகிறது , இந்த திட்டத்தில் 2.4 கோடி பயனாளிகள் பயன்பெற்று வந்தனர்.

இ-கேஒய்சி சரிப்பார்ப்பு முறையாக பின்பற்றவில்லை, 92 லட்சம் பயனாளிகள் நீக்கம்

இந்த மகளிர் உரிமைத்தொகையை பெறும் ஒவ்வொரு பயனாளியும் இ-கேஒய்சி சரிப்பார்பு முறையை மேற்கொள்ள வேண்டும் என்ரு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களாகியும் 'இ-கேஒய்சி' சரிபார்ப்பு நடைமுறை செய்யாத சுமார் 92 லட்சம் பயனாளிகளை மாநில அரசு நீக்கியுள்ளது. இது மொத்த பயனாளிகள் எண்ணிக்கையில் 38 சதவிகிதம் ஆகும்.

வேறு காரணங்களுக்காகவும் பல பயனாளிகள் நீக்கம்

மகளிர் உரிமைதொகை திட்டத்திற்கு ,இ-கேஒய்சி' சரிபார்ப்பு மட்டுமின்றி பல்வேறு காரணங்களால் 92 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்தாக் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது .

சுமார் 50 முதல் 55 லட்சம் பெண்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 'இ-கேஒய்சி' நடைமுறையை நிறைவு செய்யத் தவறியதால் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளது

குடும்ப வருமானம் மற்றும், வயது மூப்பு காரணத்தினால் பயனாளிகள் நீக்கம்

இ-கேஒய்சி' சரிப்பார்பு மட்ய்டுமல்லாமல் , 12 லட்சம் பெண்களின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கும் மேல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.5 லட்சம் பெண்கள் அதிபட்ச வயதான 65-ஐ கடந்துள்ளதால் தகுதி நீக்கம் செய்ய்ப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முறைகேடு காரணமாகவும் நீக்கம்

மேலும் சுமார் 5 லட்சம் பெண்கள் ஏற்கனவே 'நமோ ஷேத்காரி யோஜனா' திட்டத்தின் பயனர்களாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடைந்து வந்த 14,000 ஆண்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது.

தவறுதலாக நீக்கப்பட்டால், மறுபரிசீலனை

இந்த பயனாளர்கள் நீக்கத்தில் தவறுதலாக நீக்கப்பட்டவர்கள் மறுபரிசீலனைக்கு முறையிடலாம் என்றும், மறுசரிபார்ப்பு நடைமுறைக்குப் பின்னரே பயனாளிகளின் இறுதி எண்ணிக்கை வெளியாகும் என்றும் அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மகளிர் உரிமை தொகை , சிஏஜி அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளதாவது

இதுவரையில் மகாராஷ்டிர மாநிலத்தில் 2023-24 நிதியாண்டில் பெண்கள் நலனுக்காக ரூ. 261.78 கோடி செலவிடப்பட்ட நிலையில், 2024-25 நிதியாண்டில் ரூ. 33,554.36 கோடியாக உயர்ந்துள்ளதாக சிஏஜி அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

===========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in